நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசிய ஊழல் தடுப்பு திட்டம் அனைத்துப் பங்குதாரர்களின் பங்கேற்புடன் வலுப்படுத்தப்படும்: பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்: 

பிரதமரின் தலைமையில் இயங்கி வரும் தேசிய ஆளுகை அமைச்சரவை சிறப்புக் குழுவின் (JKKTN) சந்திப்புக் கூட்டத்தில், அனைத்து தரப்பினரின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்டு ஊழல் தடுப்பு திட்டத்தை மேலும் வலுப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

 சான்றளிக்கப்பட்ட நேர்மை அதிகாரி திட்டம் (Certified Integrity Officer – CeIO) அமல்படுத்துவதும், அரசுத் துறைகளுக்கிடையிலான மூலோபாய ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதும் இந்தக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மக்கள் நம்பிக்கையை நிலைநிறுத்தவும் தேசிய நிறுவனங்களின் மீது உள்ள நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தவும், நிர்வாகத் தெளிவுத்தன்மை மற்றும் நேர்மையை அரசுப் பணியின் மையமாக வைத்துக் கொண்டு ஆட்சித் திறனை வலுப்படுத்த அரசு தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றார் அவர்.

“JKKTN கூட்டத்தை நான் தலைமை தாங்கியபோது, பொதுமக்களின் பணத்தில் ஏற்படும் கசிவு  அதிகார துஷ்பிரயோகம் ஆகியவை மிகவும் கடுமையான பிரச்சினை என்பதை வலியுறுத்தினேன். இது நாட்டின் நிர்வாக முறையைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பொதுச் சுகாதாரம், சுற்றுச்சூழல், நேர்மை ஆகியவற்றையும் பாதிக்கிறது.

“ஊழலைத் தடுக்க சட்ட அமலாக்கம் மட்டும் போதாது. பொது துறை, தனியார் துறை, சமூகம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய நல்ல நிர்வாக நடைமுறைகள் மூலம் இந்த முயற்சியை வலுப்படுத்த வேண்டும்.

“இந்தக் கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டவற்றில் CeIO திட்டம் அமல்படுத்தல், அனைத்து தரப்பினரின் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்ட தேசிய ஊழல் தடுப்பு திட்டத்தை வலுப்படுத்துதல், அரசுத் துறைகளுக்கிடையிலான மூலோபாய ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்,” என்று அவர் இன்று தனது சமூக ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset