நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிலாங்கூர் சுங்கத்துறையின் அதிரடி சோதனை: 15 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான பட்டாசு, புகையிலை பறிமுதல்

கிள்ளான்: 

கடந்த மாதம் சிலாங்கூர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மலேசிய ராயல் சுங்கத்துறை நடத்திய அதிரடிச் சோதனையில், சுமார் 15 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சுங்கத்துறை இயக்குனர் முஹம்மத் அசார் அஹமத் பஹாராசி இது குறித்து கூறுகையில், புஞ்சாக் ஆலம் பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் 2 லட்சத்து 66 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான பட்டாசுகள் பிடிபட்டதாகத் தெரிவித்தார். 

அதேபோல், கிள்ளான் மேற்குத் துறைமுகத்தில் 'பார்ட்டி அலங்காரப் பொருட்கள்' என்று பொய்யாகத் தகவல் அளித்து வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய முயன்ற சுமார் 13 டன் எடையுள்ள பட்டாசுகளையும் அதிகாரிகள் மீட்டனர்.

மேலும், முறையான இறக்குமதி அனுமதி இன்றி 'எனர்ஜி டிரிங்க்' எனப் பொய் கூறி கடத்த முயன்ற 2,880 கிலோ ஷிஷா புகையிலை, வடக்குத் துறைமுகத்தில் சிக்கிய 3,900 கிலோ புகையிலை ஆகியவற்றையும் சுங்கத்துறை பறிமுதல் செய்தது. 

முறையான உரிமம் இன்றி பட்டாசு, புகையிலைப் பொருட்களை இறக்குமதி செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்தச் சம்பவங்கள் தொடர்பாக 1967-ஆம் ஆண்டு சுங்க வரிச் சட்டத்தின் கீழ் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset