நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

40% வாடகை விளம்பரங்களில் தலைவிரித்தாடும் இனப் பாகுபாடு: இந்திய சமூகத்தின் குமுறல்கள்

ஷா ஆலம்:

கிள்ளான் பகுதியில் வாடகைக்கு விடப்படும் அறைகளில், 40 சதவீதத்திற்கும் அதிகமான விளம்பரங்கள் இனப் பாகுபாட்டைக் கொண்டுள்ளதாக 'ஆர்கிடெக்ட்ஸ் ஆஃப் டைவர்சிட்டி' (AOD) அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதில் குறிப்பாக, இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற இனத்தவரை விட அதிகப்படியான பாகுபாட்டை எதிர்கொள்வது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சுமார் 31.7 சதவீத விளம்பரங்கள் இந்தியர்களுக்கு அறை வழங்கத் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளன.

இந்த ஆய்வின்படி, சீனர்களுக்கு 96.1 சதவீதமும், மலாய்க்காரர்களுக்கு 92.4 சதவீதமும் வாடகை அறைகள் கிடைக்க வாய்ப்புள்ள நிலையில், இந்தியர்களுக்கு 68.3 சதவீத வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. 

மேலும், இந்தியர்களை ஏற்கும் அறைகளின் வாடகை, மற்ற அறைகளை விட சராசரியாக 11.2 சதவீதம் அதிகமாக உள்ளது. 

இதனால் இந்திய வாடகையாளர்கள் பாகுபாட்டை எதிர்கொள்வது மட்டுமின்றி, குறைந்த விலையில் அறைகளைப் பெறுவதிலும் பெரும் சவால்களைச் சந்திப்பதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset