நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

15 வயது மாணவியிடம் அத்துமீறல்: குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

மூவார்: 

ஏற்கனவே சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஒருவர், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு மாணவி ஒருவரிடம் உடல் ரீதியான பாலியல் தொந்தரவு செய்த குற்றத்தில் இங்கு உள்ள அமர்வு நீதிமன்றம் இன்று அவருக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனையும் இரண்டு பிரம்படிகளையும் விதித்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட முஹம்மத் நஸ்ரி முஹம்மத் ஜானி (41) மீது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையும், முன்வைக்கப்பட்ட மேல்முறையீட்டையும், குற்றப்பத்திரிக்கை தரப்பின் வாதங்களையும் பரிசீலித்து நீதிபதி முஹம்மத் கைரி ஹாரோன் இந்தத் தண்டனையை வழங்கினார்.

இதனுடன், தோட்டப்பணியில் ஈடுபட்டு வந்த குற்றவாளி சிறை தண்டனை அனுபவிக்கும் காலத்தில் ஆலோசனை அமர்வுகளிலும் பங்கேற்க வேண்டும் என்றும், தண்டனை முடிந்த பின்னர் இரண்டு ஆண்டுகள் போலிஸ் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, நான்கு குழந்தைகளின் தந்தையான குற்றவாளி, 2020 டிசம்பர் 19 அன்று காலை 11 மணியளவில் செகாட்மாட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 15 வயது மாணவியிடம் இந்தச் செயலினை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

ஆகையால் , குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச்செயல்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14 (அ) கீழ் அவர் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.

சம்பவம் நடந்த நாளில் குற்றவாளி பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு உணவு கொண்டு சென்றார்.

அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர் வீட்டில் தனியாக இருந்தார். பின்னால் இருந்து வந்த குற்றவாளி அவரை அணைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், அவர் பாதிக்கப்பட்டவரை உள்ளே இழுத்துச் செல்ல முயன்றுள்ளார். ஆனால் பாதிக்கப்பட்டவர் அறை முன்பு விழுந்துவிட்டார்.

பின்னர் பாதிக்கப்பட்டவர் செகாமாட்டில் உள்ள பாத்து அமான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில், போலிசார் செகாமாட் பாளோங் திமூர் பகுதியில் உள்ள எண்ணெய் பனைத் தோட்டத்தில் உள்ள ஒரு குடிசையில் சம்பவம் நடந்த பத்து நாட்களுக்குப் பிறகு குற்றவாளியைக் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் டியானா நஜிஹா முஹம்மத் ஃபௌஸி ஆஜரானார். குற்றவாளிக்காக தேசிய சட்ட உதவி அறக்கட்டளையைச் சேர்ந்த வழக்கறிஞர் நோர் ஹபீஸா அப்துல்லா ஆஜரானார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset