செய்திகள் மலேசியா
இளைஞர்களுக்கான ‘உணவு உற்பத்தி தோட்டத் திட்ட முயற்சி’: அமைச்சர் டத்தோ சான் ஃபூங் அறிவிப்பு
கோலாலம்பூர்:
நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், இளைஞர்களை விவசாயத் துறையில் ஈர்ப்பதற்காக 'நிலையான உணவு உற்பத்தி தோட்டத் திட்ட முயற்சி' (TKPM) திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற மேலவையில் இன்று உரையாற்றிய விவசாய, உணவுப் பாதுகாப்புத் துறை துணை அமைச்சர் டத்தோ சான் ஃபூங் ஹின், இளைஞர்கள் விவசாய நிலங்களைப் பெற்று பயிர்ச்செய்கை, கால்நடை வளர்ப்பில் ஈடுபட இந்தத் திட்டம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என்று தெரிவித்தார்.
தற்போது நாடு முழுவதும் 76 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், ஆர்வம் உள்ள இளைஞர்கள் அந்தந்த மாநில விவசாயத் துறையின் சமூக ஊடகங்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், நெல் விவசாயிகளின் உழைப்பைச் சுரண்டும் வகையில் செயல்படும் சில தரப்பினர் குறித்தும் எச்சரிக்கை விடுத்தார். குறிப்பாக, நெல் எடையைக் குறைத்துக் காட்டும் முறைகேடுகளில் ஆலை உரிமையாளர்களோ அல்லது இடைத்தரகர்களோ ஈடுபட்டால், உடனடியாக அமைச்சிடம் புகார் அளிக்குமாறு அவர் விவசாயிகளை வலியுறுத்தினார்.
விவசாயிகளின் வருமானத்தைப் பாதிக்கும் இத்தகைய முறையற்றச் செயல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 12, 2026, 5:35 pm
மாணவர்களின் விளையாட்டு திறன் ஒன்றிணையும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டி
March 12, 2026, 5:31 pm
ஹுலு சிலாங்கூரில் துயர விபத்து: மூவர் உயிரிழப்பு
March 12, 2026, 5:27 pm
சரவாக்கில் பரபரப்பு: காட்டில் சிக்கிய 22 வயது இளைஞர் 6 நாட்களுக்குப் பின் மீட்பு
March 12, 2026, 4:53 pm
15 வயது மாணவியிடம் அத்துமீறல்: குற்றவாளிக்கு 6 ஆண்டு சிறை தண்டனை
March 12, 2026, 4:51 pm
4 மாத குழந்தை மரண வழக்கு: பயிற்சி இல்லாமல் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள்
March 12, 2026, 4:01 pm
40% வாடகை விளம்பரங்களில் தலைவிரித்தாடும் இனப் பாகுபாடு: இந்திய சமூகத்தின் குமுறல்கள்
March 12, 2026, 3:58 pm
