செய்திகள் தொழில்நுட்பம்
வான் ஆலன் விண்கலத்தின் இறுதிப் பயணம்: 14 ஆண்டுகளுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறது
வாஷிங்டன்:
பூமியின் கதிர்வீச்சு மண்டலங்களை ஆய்வு செய்வதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட நாசாவின் 'வான் ஆலன் புரோப் ஏ' (Van Allen Probe A) விண்கலம், சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைகிறது.
600 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம், மலேசிய நேரப்படி இன்று புதன்கிழமை காலை 8:45 மணி அளவில் வளிமண்டலத்திற்குள் நுழையும் என்று அமெரிக்க விண்வெளிப் படை கணித்துள்ளது.
சூரியனின் செயல்பாடுகள் அதிகரித்ததன் காரணமாக ஏற்பட்ட வளிமண்டல ஈர்ப்பு விசை, இந்த விண்கலத்தின் வருகையைத் திட்டமிட்டதை விட 10 ஆண்டுகள் விரைவுபடுத்தியுள்ளது.
வளிமண்டலத்தில் பயணிக்கும்போது இந்த விண்கலத்தின் பெரும்பாலான பாகங்கள் உராய்வினால் எரிந்து அழிந்துவிடும் என்றும், ஒருவேளை எஞ்சிய பாகங்கள் விழுந்தாலும் அவை கடலில் விழவே அதிக வாய்ப்புள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. இதனால் மனிதர்களுக்கு ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் ஏழு ஆண்டுகள் விண்வெளியில் செயல்பட்ட இந்த விண்கலம், பூமியைச் சுற்றியுள்ள கதிர்வீச்சு வளையங்கள் குறித்த அரிய தரவுகளை வழங்கியதுடன், தற்காலிகமான மூன்றாவது கதிர்வீச்சு மண்டலம் இருப்பதையும் கண்டறிந்து சாதனை படைத்தது.
இதன் இரட்டை விண்கலமான 'புரோப் பி' (Probe B), வரும் 2030-ஆம் ஆண்டுக்குப் பிறகே பூமிக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
September 15, 2026, 10:13 am
தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டி மாணவர்களின் திறனை மேம்படுத்தும்
September 10, 2026, 12:42 pm
ஆப்பிள் ஐபோன் 18 ப்ரோ சீரிஸ் அறிமுகம்: iPhone18 Pro, 18 Pro Max மற்றும் போல்டபிள் மாடலான iPhone Duo அறிமுகம்
August 31, 2026, 9:40 pm
Apple நிறுவனத்தின் அடுத்த தலைமை நிர்வாக அதிகாரியாக ஜான் டெர்னஸ் பதவியேற்கிறார்
August 22, 2026, 6:25 pm
கார் கைப்பிடி பிரச்சினை: வரலாறு காணாத அளவுக்குக் கார்களைத் திரும்பப் பெறும் சீனா
August 20, 2026, 4:54 pm
AI இல் பகிரப்படும் ரகசிய விவரங்கள் திருடப்படும் அபாயம்: பொதுமக்களுக்கு அமெரிக்க போலிஸ் எச்சரிக்கை
July 15, 2026, 11:27 am
நாசா விண்வெளி வீரர் அனில் மேனனை சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ரஷ்யா வெற்றிகரமாக அனுப்பியது
June 30, 2026, 10:41 am
இனி தொலைபேசி எண்ணின்றி தொடர்புக்கொள்ளும் வசதி: 'Username' வசதியை அறிமுகப்படுத்தும் வாட்ஸ்அப்
June 28, 2026, 8:37 pm
ஜெமினை ஏய்யைப் பயன்படுத்த மெட்டாவுக்கு கூகுள் புதிய கட்டுப்பாடு
June 24, 2026, 12:27 pm
AI யுகத்துக்கு மலேசிய ஊடகங்கள் தயாராகின்றன: Google அறிமுகப்படுத்திய இரு திட்டங்கள்
June 13, 2026, 10:15 am
