செய்திகள் இந்தியா
மேற்கு ஆசிய மோதலின் தாக்கம்: விமான எரிபொருள் கட்டணம் உயர்வு
டெல்லி:
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதலால் எண்ணெய் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா விமான நிறுவனம் உள்நாட்டு, சர்வதேச பயணங்களுக்கான எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அதிகரித்துள்ளது.
ஐரோப்பா, வட அமெரிக்க, ஆஸ்திரேலியா செல்லும் பயணங்களுக்கான டிக்கெட் கட்டணம் மார்ச் 18 முதல், 25-50 அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியா, தென் ஆசியா, ஆப்பிரிக்கா செல்லும் முன்பதிவுகளுக்கு 10 முதல் 30 அமெரிக்க டொலர் வரை கூடுதல் கட்டணம் நாளை முதல் அமலுக்கு வரும்.
மேலும் உள்நாட்டு, தென் ஆசியப் பயணங்களுக்கு வியாழக்கிழமை முதல் 399 ரூபாய் கூடுதல் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும்.
புவியியல் அரசியல் பதற்றம் காரணமாக விமான எரிபொருள் விலை திடீரென உயர்ந்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. விமான நிறுவனங்களின் செயல்பாட்டு செலவில் சுமார் 40 சதவீதம் எரிபொருள் செலவாகும் என்றும், விநியோக பாதிப்பால் மார்ச் தொடக்கத்திலிருந்து அதன் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பையில் விதிக்கப்படும் அதிக வரிகளும், விமான நிறுவனங்களின் செலவுச் சுமையை மேலும் அதிகரித்துள்ளதாக நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹாங்காங், ஜப்பான், தென் கொரியா செல்லும் பாதைகளுக்கான கூடுதல் கட்டண உயர்வு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் மோதல் காரணமாக எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டதுடன், உலக விமான சேவைகளும் அட்டவணை மாற்றங்கள், செலவுக் கூடுதலால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஈரான், தன் எதிரிகளுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல்கள் ஹார்முஸ் கடல்சந்தி வழியாக சென்றால் தாக்கும் என எச்சரித்துள்ள நிலையில், அந்தப் பகுதி உலக எரிசக்தி வர்த்தகத்திற்கு முக்கியமான கடல் பாதையாகும்.
இந்நிலையில், மத்திய கிழக்கு பகுதியில் உள்ள துபாய், தோஹா, அபுதாபி போன்ற முக்கிய விமான மையங்களிலும் மோதலின் தாக்கம் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
