செய்திகள் மலேசியா
சண்டாகானில் துயரம்: மண் சரிவில் சிக்கிய 76 வயது முதியவர் உயிரிழப்பு
சண்டாகான்:
நகர மையத்தில் உள்ள ஒரு விடுதியின் பின்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 76 வயதுடைய முதியவர் உயிரிழந்தார்.
அகஸ்டின் பிரடெரிக் ஜே. லிங்கம் என அடையாளம் காணப்பட்ட அவர், அந்த விடுதியின் பணியாளராக இருந்தார். அதிக மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி இயந்திரத்தை இயக்க முயன்றபோது திடீரென மண் சரிவு ஏற்பட்டு அவர் மண்ணில் புதையுண்டார்.
சம்பவம் குறித்து காலை 6.39 மணியளவில் தகவல் கிடைத்ததாக சண்டாகான் தீயணைப்பு, மீட்பு நிலையத் தலைவர் ஜிம்மி லாகுங் தெரிவித்தார். உடனடியாக 10 பேர் கொண்ட குழு சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டது.
தீயணைப்புத் துறையினர் காலை 7.14 மணியளவில் அவரை மீட்டெடுத்தனர். ஆனால் மருத்துவக் குழு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தியது.
பின்னர் உடல் காவல்துறைக்கு ஒப்படைக்கப்பட்டதுடன், மீட்பு நடவடிக்கை காலை 8.19 மணியளவில் நிறைவடைந்தது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 12:59 pm
“செக்கு சந்திரா மீதான தாக்குதலில் துப்புகள் கிடைத்துள்ளது”: டத்தோ ஷாசெலி கஹாரின் விளக்கம்
March 11, 2026, 12:58 pm
மகனைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தாய் நீதிமன்றத்தில் ஆஜர்
March 11, 2026, 12:57 pm
மானிய சமையல் எண்ணெய் கடத்தல் முயற்சி முறியடிப்பு: வீட்டைச் சுற்றி வளைத்த அதிகாரிகள்
March 11, 2026, 12:16 pm
எரிபொருள் கடத்தல் அபாயம்: எல்லை பகுதிகளில் KPDN தீவிர கண்காணிப்பு
March 11, 2026, 12:14 pm
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு: RM9.35 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
March 11, 2026, 12:13 pm
வழி கேட்டு வந்து வழிப்பறிக்கொள்ளை: பந்திங் பனைத் தோட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்
March 11, 2026, 11:09 am
கார் பக்கக் கண்ணாடியை சேதப்படுத்திய நபரைப் போலிஸ் தேடி வருகிறது
March 11, 2026, 11:07 am
சபாவில் மானிய பெட்ரோல், கடத்தல் சிகரெட் பறிமுதல்
March 11, 2026, 11:06 am
