நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹரிராயா பண்டிகையை முன்னிட்டு மாரா கல்வி நிலையங்களுக்கு கூடுதல் விடுமுறை: டத்தோ அசிரஃப் வாஜ்டி அறிவிப்பு

கோலாலம்பூர்: 

ஹரிராயா பண்டிகையை முன்னிட்டு மக்கள் நல அறக்கட்டளையின் கீழ் செயல்படும் 345 கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதாக அதன் தலைவர் டத்தோ அசிரஃப் வாஜ்டி துசுகி அறிவித்துள்ளார்.

இந்த முடிவு மாரா தலைமை இயக்குநர் டத்தோ சுல்பிக்ரி ஒஸ்மானுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டதாக அவர் தனது சமூக வலைதள பதிவில் தெரிவித்தார். இதுகுறித்து மாரா அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன், கல்வி அமைச்சும் ஹரிராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி ஒரு நாள் கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதாக அறிவித்திருந்தது.

இந்த கூடுதல் விடுமுறை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் பண்டிகை தயாரிப்புகளை ஒழுங்காக மேற்கொள்ள உதவும் வகையில் வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset