செய்திகள் மலேசியா
மானிய சமையல் எண்ணெய் கடத்தல் முயற்சி முறியடிப்பு: வீட்டைச் சுற்றி வளைத்த அதிகாரிகள்
புத்ராஜெயா:
புத்ராஜெயாவில் உள்ள குடியிருப்பு ஒன்றில், முறையான உரிமம் இன்றி சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 78 பெட்டி மானிய சமையல் எண்ணெயை உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சக (KPDN) அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர்.
'ஓப்ஸ் காசாக்' எனும் சிறப்பு நடவடிக்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில், சுமார் 5,569 ரிங்கிட் மதிப்பிலான சமையல் எண்ணெய் கண்டறியப்பட்டது.
பொதுமக்களிடமிருந்து கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் ஒரு மாடி வீட்டைச் சோதனையிட்டபோது, அங்கு எவரும் இல்லாத நிலையில் ஒரு வாகனத்திலும், வீட்டின் வளாகத்திலும் தலா ஒரு கிலோ எடை கொண்ட 1,326 சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் பதுக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
சோதனையின் போது அவ்விடத்திற்கு வந்த உள்ளூர் நபர் ஒருவர், தாம் அந்த வீட்டின் உரிமையாளரின் மகன் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்.
மானிய விலையிலான அத்தியாவசியப் பொருட்களை வணிக நோக்கத்திற்காகச் சட்டவிரோதமாகச் சேமித்து வைத்தது தொடர்பாக, 1961-ஆம் ஆண்டு விநியோகக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் தற்போது தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
முறையான உரிமம் இன்றி இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 1:36 pm
பூர்வக்குடி மக்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்
March 11, 2026, 1:35 pm
ஒரு தரப்பினரை மட்டும் தண்டிக்காதீர்கள்: அக்மால்
March 11, 2026, 1:34 pm
திரிசூலத்தை மிதித்த தமிம் டஹாரி மீது போலிஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: நடேசன்
March 11, 2026, 1:03 pm
காதலியைத் தாக்கிய லாரி ஓட்டுநர்
March 11, 2026, 1:02 pm
இனம், மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுரை
March 11, 2026, 12:59 pm
“செக்கு சந்திரா மீதான தாக்குதலில் துப்புகள் கிடைத்துள்ளது”: டத்தோ ஷாசெலி கஹாரின் விளக்கம்
March 11, 2026, 12:58 pm
