நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சபாவில் மானிய பெட்ரோல், கடத்தல் சிகரெட் பறிமுதல்

செம்போர்னா: 

கடற்படை (PPM) நேற்று செம்போர்னா, தவாவ், லஹாட் டத்து பகுதிகளில் ஒரே நேரத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் மூலம் கட்டுப்பாட்டு பொருட்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதும் கடத்தல் சிகரெட் தொடர்பான பல செயல்பாடுகளையும் முறியடித்தது.

இங்குள்ள கம்போங் ஹாலோ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், PPM குழு கடலின் மேல் அமைந்த வீட்டில் சோதனை நடத்தியபோது, 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட 52 பீப்பாய்கள் பெட்ரோல் நிரம்பிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.

அதே பகுதியில் இருந்த ஒரு படகில் மேற்கொண்ட மேலதிக சோதனையில், 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட எட்டு பீப்பாய்கள் கொண்ட மானிய விலையில் விற்கப்படும் பெட்ரோல் சேமித்து வைக்கப்பட்டிருந்ததும் கண்டறியப்பட்டது.

இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்ட கட்டுப்பாட்டு பொருட்களை வைத்திருப்பதற்கான எந்த சட்டபூர்வ ஆவணங்களையும் வழங்க முடியாத வெளிநாட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அந்த பொருட்கள் அண்டை நாட்டிற்கு சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்ததாக நம்பப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் RM75,761.80 என மதிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, தவாவில் எரிபொருள் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான 'Toyota Hilux Single Cab' வாகனத்தைச் சோதனை செய்த போது வாகனத்தின் பின்புறத்தில் நிரப்பப்பட்ட ஏழு பீப்பாய்களில் மொத்தம் 157 லிட்டர் பெட்ரோல் இருப்பது கண்டறியப்பட்டது.

அந்தக் கட்டுப்பாட்டு பொருட்களை வைத்திருப்பதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி ஆவணங்கள் அல்லது அனுமதி பத்திரத்தை வழங்க முடியாததால் அந்த வாகன ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.

லஹாட் டத்து பகுதியில், மீன் சந்தை பகுதியில் கண்காணிப்பு மேற்கொண்டிருந்த PPM அதிகாரிகள், இரண்டு நபர்கள் கருப்பு பிளாஸ்டிக் மூட்டைகளை இறக்கி கொண்டிருப்பதை கவனித்தனர். அந்த மூட்டைகளில் கடத்தல் சிகரெட் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.

அங்கு நடத்தப்பட்ட சோதனையில் பல கருப்பு பிளாஸ்டிக் மூட்டைகளில் பல வகையான வரி செலுத்தப்படாத சிகரெட் கார்ட்டன்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவை அண்டை நாட்டிலிருந்து கடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்தப் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் RM18,420.00 என மதிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வனைத்து வழக்குகளிலும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் RM182,741.80 ஆகும் என்று சபா பிராந்தியம் 4 கடல் காவல் படை தளபதி, உதவி ஆணையர் அஹ்மத் அம்ரி அப்துல் ரஹ்மான் தெரிவித்தார். இந்த வழக்குகள் 1967 ஆம் ஆண்டின் சுங்கச் சட்டம், 1961 ஆம் ஆண்டின் வழங்கல் கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்படுகின்றன.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset