செய்திகள் மலேசியா
“செக்கு சந்திரா மீதான தாக்குதலில் துப்புகள் கிடைத்துள்ளது”: டத்தோ ஷாசெலி கஹாரின் விளக்கம்
ஷா ஆலம்:
தாமான் கின்ராரா பகுதியில் சமூக ஆர்வலர் 'சந்தரா' என்பவரின் இல்லத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறை, கொலை மிரட்டல் சம்பவங்கள் குறித்து, சிலாங்கூர் மாநிலக் காவல்துறை சில முக்கியத் தடயங்களைக் கண்டறிந்துள்ளது.
சிலாங்கூர் மாநிலக் காவல்துறைத் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த இரண்டு வழக்குகள் தொடர்பாகவும் சாதகமான பல குறிப்புகள் கிடைத்துள்ளதாகவும், ஆனால் விசாரணை இன்னும் தீவிரமாக நடைபெற்று வருவதால் கூடுதல் விவரங்களை இப்போது வெளியிட முடியாது என்றும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை மூன்று வெவ்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. முகமூடி அணிந்த ஒரு கும்பல் செக்கு சந்திராவின் வீட்டின் முன் இருந்த வாகனத்தைச் சேதப்படுத்தியதோடு, அதிகாலை பெட்ரோல் குண்டு வீசியதில் ஒரு வாகனம் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இந்தச் சூழலில், மதம், இனம், அரச குடும்பம் சார்ந்த (3R) உணர்ச்சிகரமான விவகாரங்களைத் தூண்டிவிடும் வகையில் வதந்திகளைப் பரப்புவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று டத்தோ ஷாசெலி வலியுறுத்தினார்.
சமூக அமைதியைக் குலைக்கும் வகையில் இத்தகைய உணர்ச்சிகரமான கருத்துகளைப் பரப்புபவர்கள் மீது காவல்துறை எவ்வித சமரசமுமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
மேலும், ஊடகங்களும் பொதுமக்களும் இக்கட்டான இந்தச் சூழலில் பதற்றத்தைத் தணிக்கக் காவல்துறையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் டத்தோ ஷாசெலி கஹார் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மிகவும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 1:36 pm
பூர்வக்குடி மக்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்
March 11, 2026, 1:35 pm
ஒரு தரப்பினரை மட்டும் தண்டிக்காதீர்கள்: அக்மால்
March 11, 2026, 1:34 pm
திரிசூலத்தை மிதித்த தமிம் டஹாரி மீது போலிஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: நடேசன்
March 11, 2026, 1:03 pm
காதலியைத் தாக்கிய லாரி ஓட்டுநர்
March 11, 2026, 1:02 pm
இனம், மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுரை
March 11, 2026, 12:58 pm
மகனைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தாய் நீதிமன்றத்தில் ஆஜர்
March 11, 2026, 12:57 pm
