செய்திகள் மலேசியா
கார் பக்கக் கண்ணாடியை சேதப்படுத்திய நபரைப் போலிஸ் தேடி வருகிறது
கோலாலம்பூர்:
செராஸில் ஒரு கார் பக்கக் கண்ணாடியைச் சேதப்படுத்தியதாகச் சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பாக ஆடவர் ஒருவரைப் போலிஸ் தேடி வருகிறது.
நேற்று இரவு 8.40 மணியளவில் ஒருவர் ஒரு காரின் பக்கக் கண்ணாடியை உடைத்த வீடியோ டிக் டாக்கில் வைரலானது குறித்து போலிசில் புகார் பெறப்பட்டது என்று செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் முஹம்மத் ரோஸ்டி டாவுத் தெரிவித்தார்.
இந்த வழக்கு குற்றச் சட்டத்தின் பிரிவு 427, குற்றச் சட்டத்தின் பிரிவு 506, 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு, பல்லூடகச் சட்டத்தின் பிரிவு 233ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.
“சந்தேக நபரையும் சம்பந்தப்பட்ட கார் உரிமையாளரையும் கண்டறிய விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் விசாரணைக்கு உதவ மலேசிய தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடமிருந்து உதவி பெறப்படும்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இதற்கு முன்பு, ஹோண்டா எச்.ஆர்.வி கார் ஓட்டி வந்த ஒருவர் காரில் இருந்து இறங்கி மற்றொரு காரின் பக்கக் கண்ணாடியை சேதப்படுத்தும் காட்சி கொண்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வைரலானது. பின்னர் அவர் அங்கிருந்து விலகிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 1:36 pm
பூர்வக்குடி மக்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்
March 11, 2026, 1:35 pm
ஒரு தரப்பினரை மட்டும் தண்டிக்காதீர்கள்: அக்மால்
March 11, 2026, 1:34 pm
திரிசூலத்தை மிதித்த தமிம் டஹாரி மீது போலிஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: நடேசன்
March 11, 2026, 1:03 pm
காதலியைத் தாக்கிய லாரி ஓட்டுநர்
March 11, 2026, 1:02 pm
இனம், மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுரை
March 11, 2026, 12:59 pm
“செக்கு சந்திரா மீதான தாக்குதலில் துப்புகள் கிடைத்துள்ளது”: டத்தோ ஷாசெலி கஹாரின் விளக்கம்
March 11, 2026, 12:58 pm
மகனைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தாய் நீதிமன்றத்தில் ஆஜர்
March 11, 2026, 12:57 pm
