செய்திகள் மலேசியா
புக்கித் தெரெசெக் ஏற்றத்தில் சிக்கிக் கொண்ட ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள்
ஜெராண்டுட்:
ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த இரண்டு முதிய சுற்றுலாப் பயணிகள் நேற்று இங்குள்ள 344 மீட்டர் உயரம் கொண்ட புக்கித் தெரெசெக் மலையை ஏறும் போது சோர்வும் காயமும் காரணமாக மலையிலேயே சிக்கிக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
75 வயதான மரியோனுக்குக் காலில் முறிவு ஏற்பட்டதாகவும், முழங்கால் எலும்பு இடம் மாறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, அவரது நண்பர் 69 வயதான பெர்ன்ட் அல்ஃப்ரெட்டுக்குத் தண்ணீர் குறைவால் ஏற்பட்ட கடும் சோர்வு காரணமாக தொடர்ந்து ஏற முடியாத நிலைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக தமது தரப்புக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து மதியம் சுமார் 1 மணியளவில் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது என்று கோலா தஹான் மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் (APM) இயற்கை உயிர்காப்பு ஒருங்கிணைப்பாளர் ரோஸ்லான் அபு காசிம் தெரிவித்தார்.
அந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் மலையேறும் பாதையின் நடுப்பகுதியில் சிக்கியிருந்தனர். மீட்பு குழு சுமார் இரண்டு கிலோமீட்டர் நடந்து சம்பவ இடத்தை அடைந்து, பின்னர் அவர்களைத்தூக்குக் கட்டிலில் வைத்து கீழே கொண்டு வந்தனர் என்றார் அவர்.
“அதன் பிறகு இருவரும் தெம்பெலிங் நதி வழியாக படகில் கொண்டு செல்லப்பட்டு கோலா தஹான் துறைமுகம் சென்றடைந்தனர். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் கோலா தஹான் சுகாதார மருத்துவமனைக்கு அவசரமாக அனுப்பப்பட்டனர்,” என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 12:59 pm
“செக்கு சந்திரா மீதான தாக்குதலில் துப்புகள் கிடைத்துள்ளது”: டத்தோ ஷாசெலி கஹாரின் விளக்கம்
March 11, 2026, 12:58 pm
மகனைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தாய் நீதிமன்றத்தில் ஆஜர்
March 11, 2026, 12:57 pm
மானிய சமையல் எண்ணெய் கடத்தல் முயற்சி முறியடிப்பு: வீட்டைச் சுற்றி வளைத்த அதிகாரிகள்
March 11, 2026, 12:16 pm
எரிபொருள் கடத்தல் அபாயம்: எல்லை பகுதிகளில் KPDN தீவிர கண்காணிப்பு
March 11, 2026, 12:14 pm
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பல் முறியடிப்பு: RM9.35 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்
March 11, 2026, 12:13 pm
வழி கேட்டு வந்து வழிப்பறிக்கொள்ளை: பந்திங் பனைத் தோட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்
March 11, 2026, 11:09 am
கார் பக்கக் கண்ணாடியை சேதப்படுத்திய நபரைப் போலிஸ் தேடி வருகிறது
March 11, 2026, 11:07 am
