செய்திகள் மலேசியா
வழி கேட்டு வந்து வழிப்பறிக்கொள்ளை: பந்திங் பனைத் தோட்டத்தில் அதிர்ச்சி சம்பவம்
ஷா ஆலம்:
புக்கித் பேரா, பந்திங் அருகிலுள்ள செம்பனை தோட்டத்தில் நேற்று ஆயுதம் ஏந்திய இருவர் ஒரு ஒப்பந்ததாரரை தாக்கி RM9,000-க்கும் அதிகமான பணத்தை பறித்துச் சென்றனர்.
குவாலா லாங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் மொஹ்ட் அக்மல்ரிசால் ராட்ஸி தெரிவித்ததாவது, 50 வயதுக்கு மேற்பட்ட பாதிக்கப்பட்ட நபரை இரண்டு சந்தேக நபர்கள் அணுகி, தாங்கள் வழிதவறிவிட்டதாக கூறி தோட்டத்திலிருந்து வெளியேறும் வழியை கேட்க வந்ததாக கோலா லாங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் முஹம்மத் அக்மல்ரிசால் ராட்ஸி தெரிவித்தார்.
பின்னர் சந்தேக நபர்களில் ஒருவர் பராங் கத்தியை எடுத்துக் காட்டி, பாதிக்கப்பட்ட நபரின் கைகளையும் கால்களையும் கட்டி, அவரது முகத்தில் உதைத்தாகவும் அவர் கூறினார்.
“அதன்பின், சந்தேக நபர்கள் வெள்ளை நிற தொயோட்டா ஹிலுக்ஸ் வாகனத்தையும், ஒரு கைப்பேசியையும், புகாரளித்த நபரின் முக்கிய ஆவணங்கள், சுமார் RM9,500 பணத்தையும் பறித்து தப்பிச் சென்றனர்.
“போலிசார் நடத்திய விசாரணையில், அந்த வாகனம் ஒரு மணி நேரத்திற்குள் பூச்சோங் பகுதியில் உள்ள ஜாலான் பிரிமா சாலையோரத்தில் சந்தேக நபர்களால் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது,” என்று அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள போலிஸ் நிலையத்திற்குச் சென்று தகவல் வழங்குமாறும் அல்லது கோலா லாங்காட் மாவட்ட போலிஸ் தலைமையகச் செயல்பாட்டு அறை எண்ணான 03-3187 2222-ஐ தொடர்புகொள்ளுமாறும் முஹம்மத் அக்மல்ரிசால் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கு குற்றச் சட்டத்தின் பிரிவு 395, 397ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 11, 2026, 1:36 pm
பூர்வக்குடி மக்களுக்கு ரமலான் உதவிகள் வழங்கப்பட்டது: டத்தோ சரவணக்குமார்
March 11, 2026, 1:35 pm
ஒரு தரப்பினரை மட்டும் தண்டிக்காதீர்கள்: அக்மால்
March 11, 2026, 1:34 pm
திரிசூலத்தை மிதித்த தமிம் டஹாரி மீது போலிஸ் நடவடிக்கை எடுக்காதது ஏன்?: நடேசன்
March 11, 2026, 1:03 pm
காதலியைத் தாக்கிய லாரி ஓட்டுநர்
March 11, 2026, 1:02 pm
இனம், மத உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்: பொதுமக்களுக்கு அறிவுரை
March 11, 2026, 12:59 pm
“செக்கு சந்திரா மீதான தாக்குதலில் துப்புகள் கிடைத்துள்ளது”: டத்தோ ஷாசெலி கஹாரின் விளக்கம்
March 11, 2026, 12:58 pm
மகனைத் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள தாய் நீதிமன்றத்தில் ஆஜர்
March 11, 2026, 12:57 pm
