செய்திகள் இந்தியா
இந்தியாவில் சமையல் எரிவாயு பற்றாக்குறை: அரசிடம் விளக்கம் கோரிய எதிர்க்கட்சிகள்
டெல்லி:
மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் மோதல் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலால், இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரில் பற்றாக்குறை ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகிய நிலையில், எதிர்க்கட்சிகள் அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.
பல உணவக அமைப்புகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு இருப்பதாக தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், வீட்டு சமையல் எரிவாயு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அவசியப் பொருட்கள் சட்டத்தை அரசு அமல்படுத்தியுள்ளது. இதன் கீழ், சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோல் இரசாயன நிறுவனங்கள் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்கவும், முக்கிய எரிபொருள் மூலங்களை எரிவாயு உற்பத்திக்குத் திருப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சில துறைகளுக்கு வழங்கப்படும் இயற்கை எரிவாயு விநியோகம் முன்னுரிமை அடிப்படையில் கடந்த ஆறு மாதங்களின் சராசரி பயன்பாட்டின் முழு அளவிலும் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நகரங்களில் புதிய சிலிண்டர் பதிவு செய்ய 25 நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையும், எரிவாயு பற்றாக்குறை குறித்த தகவல்களும் அரசின் நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்க காரணமாகியுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
