செய்திகள் இந்தியா
திறந்த குழியில் விழுந்த இளைஞர் பலி: முக்கிய ஒப்பந்ததாரர் கைது
டெல்லி:
மேற்கு டெல்லியின் ஜனக்புரி பகுதியில் சாலை அகழ்வுப் பணிக்காக தோண்டப்பட்ட திறந்த குழியில் விழுந்து இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முக்கிய ஒப்பந்ததாரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரில் இருந்து ஹிமான்ஷு குப்தா என்ற ஒப்பந்ததாரரை காவல்துறை பிடித்து டெல்லிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி 5, 6ஆம் தேதிகளுக்கிடையிலான இரவில், பாலாம் கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய கமல் தியானி மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலையில் பாதுகாப்பின்றி இருந்த ஆழமான குழியில் விழுந்தார். கழிவுநீர் குழாய்களை புதுப்பிக்கும் பணிக்காக அந்த அகழ்வு மேற்கொள்ளப்பட்டிருந்தது.
தீயணைப்பு வீரர்கள் அவரை குழியிலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விசாரணையில், அந்த பணியிடத்தில் தடுப்பு அமைப்பு, எச்சரிக்கை விளக்குகள், அறிவிப்பு பலகைகள், போதிய ஒளி ஏற்பாடுகள் போன்ற அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இதற்கு முன், இந்த வழக்கில் ஒப்பந்ததாரர்களான ஹிமான்ஷு குப்தா, கவிஷ் குப்தாவுக்கு முன் ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்தது. இந்த சம்பவம் தவிர்க்கக்கூடிய விபத்து என்றும், ஒப்பந்தப் பணிகளில் அலட்சியம் காரணமாக பொதுச் சாலைகள் மரண வலையாக மாறக்கூடாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
