செய்திகள் மலேசியா
“தற்காலிக இடைநீக்கம் ஏன்? தவறு செய்திருந்தால் என்னை நீக்குங்கள்”: டத்தோ ஸ்ரீ ரொனால்ட் கியாண்டி
புத்ராஜெயா:
பெர்சத்து கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டி, தான் உண்மையாக தவறு செய்ததாக கருதினால், கட்சியில் இருந்து நேரடியாக நீக்க வேண்டும் என ஒழுக்கக்குழுவுக்கு சவால் விடுத்துள்ளார்.
சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்ததாவது, கட்சியின் அரசியல் சட்ட விதியையும், ஒழுக்க விதிகளையும் மீறியதாகக் கூறி தன்னை இரண்டு காலங்கள் அல்லது ஆறு ஆண்டுகள் கட்சி உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளதாக கூறினார்.
இந்த தீர்மானம், கட்சித் தலைவர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசினையும், அவரைச் சுற்றியுள்ள சிறிய குழுவை பாதுகாக்கும் அரசியல் கருவியையும் வலுப்படுத்துவதற்காக என ரொனால்ட் குற்றம்சாட்டினார்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் கட்சியின் திசை மாறி, முஹைதீன் யாசினை, எதிர்காலத்தின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் நோக்கில் நடவடிக்கைகள் நடைபெறுகின்றன என்றும் அவர் கூறினார்.
அந்த நோக்கத்திற்கு தடையாக இருப்பவர்கள் ஒழுக்கக்குழு நடவடிக்கைகள் மூலம் கட்சியில் இருந்து நீக்கப்படுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இதுபோன்ற நடவடிக்கை முன்பும் சில தலைவர்களுக்கு எடுக்கப்பட்டதாகவும், அதன் விளைவாக தலைவருக்கு எப்போதும் ஆதரவு தெரிவிக்கும் உறுப்பினர்கள் மட்டுமே கட்சியில் மீதமுள்ளதாகவும் ரொனால்ட் தெரிவித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 6:53 pm
மலேசியாவின் ஆகச் சிறந்த 50 பெண் ஆளுமைகள்: ‘Her Next Chapter’ அங்கீகாரம்
March 10, 2026, 5:41 pm
பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு
March 10, 2026, 5:32 pm
ரமலான் மாதத்தில் குர்ஆன் அவமதிப்பு?: சபாவில் தீவிர விசாரணை தொடக்கம்
March 10, 2026, 5:31 pm
இந்துமதச் சின்னத்தை அவமதித்தது மிகையான செயல்: பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்
March 10, 2026, 4:51 pm
3ஆர் பிரச்சினைகளைத் தீர்க்க ஐஎஸ்ஏ சட்டம்; மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 10, 2026, 4:50 pm
இனவாதத்தை தூண்டுபவர்களை ஹீரோவாக்க விரும்பவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
March 10, 2026, 4:22 pm
