நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குடிவரவுத் துறையின் பிடியில் 'மினி டாக்கா': வெளிநாட்டுக் குடியேறிகளைக் கண்டறியத் தீவிரக் கண்காணிப்பு

கோலாலம்பூர்: 

மலேசியத் தலைநகரின் ஜாலான் சிலாங், லெபு புடு உள்ளிட்ட 'மினி டாக்கா' என அழைக்கப்படும் பகுதிகளில், சட்டவிரோதக் குடியேறிகளைக் கண்டறியும் நோக்கில் குடிவரவுத் துறை இன்று பெரிய அளவிலான சோதனையை மேற்கொண்டது.

செவ்வாய்க்கிழமை மதியம் 2.45 மணியளவில் மஸ்ஜித் ஜமெக் முதல் ஜாலான் சிலாங் வரை நீடித்த இந்தச் சோதனையில், மொத்தம் 823 வெளிநாட்டினர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். 

புத்ராஜெயா குடிவரவுத் துறை அமலாக்கப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, அங்குள்ள வெளிநாட்டினரின் ஆவணங்கள் தீவிரமாகச் சரிபார்க்கப்பட்டன.

இது குறித்து குடிவரவுத் துறை துணை தலைமை இயக்குநர் டத்தோ லோக்மான் எஃபெண்டி ரம்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்றைய சோதனையில் மியான்மர், வங்கதேசம், பாகிஸ்தான், ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆய்வு செய்யப்பட்டனர். 

அவர்கள் அனைவரும் முறையான பயண ஆவணங்கள், வேலைக்கான அனுமதிச் சீட்டுகளைக் கொண்டுள்ளதும், சட்டப்பூர்வமாகவே நாட்டில் தங்கியிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என டத்தோ லோக்மான் தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset