செய்திகள் மலேசியா
மலேசியாவின் ஆகச் சிறந்த 50 பெண் ஆளுமைகள்: ‘Her Next Chapter’ அங்கீகாரம்
கோலாலம்பூர்:
பெண் தலைமைத்துவத்தை ஊக்குவிக்கும் ‘Her Next Chapter’ தளம், மலேசியாவின் மிகச்சிறந்த 50 தனியார் நிறுவனங்களின் பெண் தலைவர்களது பட்டியலை வெளியிட்டுள்ளது. நாட்டின் தனியார் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, எதிர்காலத்தை வடிவமைக்கும் பெண் ஆளுமைகளை கௌரவிப்பதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.
மலேசியப் பொருளாதாரத்தை வழிநடத்தும், தலைமைத்துவ மேம்பாட்டில் முக்கிய பங்காற்றும் திறமையான பெண் வல்லுநர்களை உலகிற்கு அடையாளப்படுத்துவதை இந்த முன்முயற்சி இலக்காகக் கொண்டுள்ளது.
இந்த கௌரவப் பட்டியலில் மைக்ரோசாப்ட் (Microsoft) நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஜாஸ்மின் பேகம், கசானா நேஷனல் பெர்ஹாட் (Khazanah Nasional Berhad) நிறுவனத்தைச் சேர்ந்த டத்தோ ஷாஹிரா அஹமத் பசாரி உள்ளிட்ட முன்னணி ஆளுமைகள் இடம்பெற்றுள்ளனர்.
இவர்கள் தங்களின் துறைகளில் ஆற்றிய அரிய பங்களிப்பிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். முக்கிய பொறுப்புகளை வகிப்பதோடு மட்டுமல்லாமல், நிறுவனங்களில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வரும் இவர்களின் செயல்பாடு, அடுத்த தலைமுறை பெண் தலைவர்களுக்கு பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
இந்த அங்கீகாரத்தின் ஒரு பகுதியாக, ‘Her Next Chapter’ முதலில் 25 பெண் தலைவர்களின் பட்டியலை அறிமுகப்படுத்தியுள்ளது.
தனியார் நிறுவனத்தில், உலகில் பெண்களின் பங்களிப்பை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதன் மூலம், அதிகப்படியான பெண்கள் வணிகத் துறையை வழிநடத்த முன்வர வேண்டும் என்பதே இத்தளத்தின் எதிர்பார்ப்பாகும்.
இத்தகைய முயற்சிகள் மலேசியப் பெண்களின் தலைமைத்துவத் திறனை வலுப்படுத்துவதோடு, வணிக உலகின் எதிர்காலத்தைச் செதுக்குவதற்கும் துணையாக இருக்கும் என நம்பப்படுகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 5:41 pm
பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு
March 10, 2026, 5:32 pm
ரமலான் மாதத்தில் குர்ஆன் அவமதிப்பு?: சபாவில் தீவிர விசாரணை தொடக்கம்
March 10, 2026, 5:31 pm
இந்துமதச் சின்னத்தை அவமதித்தது மிகையான செயல்: பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்
March 10, 2026, 4:51 pm
3ஆர் பிரச்சினைகளைத் தீர்க்க ஐஎஸ்ஏ சட்டம்; மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 10, 2026, 4:50 pm
இனவாதத்தை தூண்டுபவர்களை ஹீரோவாக்க விரும்பவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
March 10, 2026, 4:22 pm
