நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நவீன கால அறைகூவல்களை எதிர்கொள்ள குடும்பக் கட்டமைப்பைப் பாதுகாப்போம்: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

நவீன காலத்தின் தாக்கங்கள், அந்நிய கலாச்சார ஊடுருவல்களுக்கு மத்தியில், நாட்டின் அடித்தளமான குடும்பக் கட்டமைப்பை வலுப்படுத்துவது அவசியம் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

மலேசிய சர்வதேச வர்த்தக, கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தொழில்நுட்ப வளர்ச்சியும், டிஜிட்டல் மாற்றமும் முக்கியம் என்றாலும், அவை நமது கலாச்சாரம், மதம், பாரம்பரிய விழுமியங்களைச் சிதைத்துவிடக் கூடாது என்று சுட்டிக்காட்டினார்.

"தொழில்நுட்பப் புரட்சியை நாம் துரத்தும்போது, நமது வேர்களை மறந்துவிடக் கூடாது. குடும்பங்கள் சிதைவதைத் தடுக்கவும், நற்பண்புகளைக் காக்கவும் நாம் ஒன்றிணைய வேண்டும்," என அவர் கேட்டுக்கொண்டார்.

பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாப்பதன் மூலமே சமூகத்தின் நலனை உறுதிப்படுத்த முடியும் என்று குறிப்பிட்ட பிரதமர், குடும்ப நிர்வாகத்தில் தாய்மார்கள், மனைவிகளின் அர்ப்பணிப்பைப் பாரட்டினார். மேலும், 'பிரிஸ்மாணிதா' (PRISMAnita) போன்ற திட்டங்களின் வாயிலாக பெண்களுக்குத் தேவையான ஆலோசனைகளையும், உதவிகளையும் வழங்க அரசாங்கம் எப்போதும் துணை நிற்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset