நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இனவாதத்தை தூண்டுபவர்களை ஹீரோவாக்க விரும்பவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

நாட்டில் இனவாதத்தை தூண்டுபவர்கள் யார் என்று சொல்லி அவர்களை ஹீரோவாக்க நான் விரும்பவில்லை.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை தெரிவித்தார்.

நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் ஒரு சில தரப்பினர் தொடர்ச்சியாக நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுபோன்ற நபர்களின் நடவடிக்கைகள் மக்களிடையே அதிருப்தியையும் ஆத்திரத்தை ஏற்படுத்தி வருகிறது.

இதன் அடிப்படையில் தான் நேற்று ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தி இவ்விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்தேன்.

குறிப்பாக ஒருவர் இன்று கெஅடிலான் கட்சியில் இணைகிறார்.

நாளை அவ்வாடவர் ஆலயத்தை உடைக்கிறார் என்றால் முட்டாள் தனமானது.

மேலும் நாட்டில் இனவாதத்தை தூண்ட இதுபோன்ற நபர்களுக்கு பணம் கொடுப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இதன் அடிப்படையில் யார் அந்த நபர்கள் என்ற கேள்விகளும் பரவலாக எழுகிறது. அவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்.

அவர்கள் யார் என்று சொல்லி அவர்களை ஹீரோவாக்க நான் விரும்பவில்லை.

ஒரு சிலரை போலிசார் கைது செய்திருப்பதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது.

போலிசாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக காத்திருப்போம்.

மேலும் இந்த விவகாரத்தை நாளை அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டு செல்லவுள்ளேன்.

இதன் மூலம் இப்பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.

ஆக நம் மக்கள் இவ்விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset