நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஈகைப் பெருநாளை முன்னிட்டு மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையில் 215,000 வாகனங்கள் பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

கோலாலம்பூர்: 

அயிடில்ஃபித்ரி கொண்டாட்டத்தின் போது அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சுமார் 215,000 வாகனங்கள் மேற்கு கடற்கரை நெடுஞ்சாலையில் (WCE) பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கை சமீபத்திய சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் 160,000 வாகனங்களாக இருந்ததைவிட அதிகமாகும்.

 அடுத்த வாரத்தில் WCE புதிய சீரமைப்பு திறக்கப்படுவது  இந்தக் கொண்டாட்டக் காலத்தில் நெடுஞ்சாலை பயணிகள் அதிகரிக்கும் காரணமாக அமையும் என WCE நெருக்கடி தொடர்புகள், பங்குதாரர் ஈடுபாட்டுக்கான பொது மேலாளர் சாயித் முஹம்மத் இடித் தெரிவித்துள்ளார்.

“அடுத்த வாரம், WCE, நெடுஞ்சாலை பகுதி 4-ஐ திறக்க உள்ளது. இதன் மூலம் கிள்ளான், ஷா ஆலம், பெட்டாலிங் ஜெயா பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் 'Setia Alam'-ஐத் தவிர நேரடியாக வடக்குக்கு செல்ல WCE-ஐப் பயன்படுத்தலாம்," என்று அவர் 'The New Straits Times Press (Malaysia) Berhad' ஊழியர்களுக்கு ரமலான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கூறினார்.

 பகுதி 4 WCE-ஐ 18 மார்ச் அன்று போக்குவரத்துக் அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்ஸாண்டர் நந்தா லிங்கி திறந்து விடுவார் என அவர் தெரிவித்தார்.

பகுதி 4, 4.5 கிலோமீட்டர் நீளம் கொண்டது, முக்கிய நெடுஞ்சாலைகளுக்கு இணைப்பை உறுதி செய்யும் ‘மிசிங் லிங்க்’ ஆக செயல்படும்.

“இந்த பகுதி, NKVE/FHR2 நிலைமையுடன் NNKSB 1 நிலைமையை இணைத்து, WCE, லெபுஹர்யா பெர்சேகூதான் இடையிலான செல்லும் பாதையை எளிதாக்கும்.

பகுதி 4 திறப்பால் கிள்ளான், ஷா ஆலம் சுற்றுப்பாதைகளில் வாகன நெரிசல் குறையும்.

மேலும் பகுதி 4 திறப்பால், மெரு/காப்பார் முதல் லெபுஹர்யா பெர்சேகூதான் வரை பயண நேரம் 20 நிமிடங்களில் இருந்து 10 நிமிடங்களுக்கு குறையும்,” என்று அவர் கூறினார்.

பகுதி 4 திறப்பு WCE-ன் பங்கு சிலாங்கூர் மேற்கு பொருளாதார வளர்ச்சிக்கான தூண்டுதலாகும். குறிப்பாக தொழிற்துறை, வர்த்தகம், சேவை துறைகளுக்கு இது முக்கியமானதாகும்.

“மேலும், இது பாதுகாப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளதுடன் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் விரைவான நடவடிக்கைக்கு உதவும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset