நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3ஆர் பிரச்சினைகளைத் தீர்க்க ஐஎஸ்ஏ சட்டம்; மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

இனம், மதம் அரச நிறுவனங்கள் (3ஆர்) தொடர்பான பிரச்சினைகள் சமீபத்தில் அதிகரித்து வருவதால், வலுவான பாதுகாப்புச் சட்டங்களின் அவசியத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

முன்னர் ரத்து செய்யப்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டம் 1960 (ஐஎஸ்ஏ)ஐ மறுபரிசீலனை செய்வது இதில் அடங்கும்.

மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

சில தரப்பினரால் உணர்வுபூர்வமான பிரச்சினைகள் தற்போது அதிகரித்து வருவதால், அவை பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் அளவிற்கும், இந்த நாட்டில் உள்ள பன்முகத்தன்மை கொண்ட சமூகத்தின் நல்லிணக்கத்தை அச்சுறுத்தும் அளவிற்கும் கையாளப்படுகிறது.

இதனால் உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இன, மத உணர்வுகளைத் தொடும் பல்வேறு சம்பவங்கள் இப்போது சமூக ஊடகங்களில் எளிதாகப் பரவி வருகின்றன.

மேலும் அவை பெரும்பாலும் சில தனிநபர்கள் அல்லது குழுக்களால் குறுகிய நலன்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையே பதட்டங்களைத் தூண்டும் அபாயம் உள்ளது.

உணர்ச்சிபூர்வமான பிரச்சினைகளை துஷ்பிரயோகம் செய்வதும், நாட்டின் அமைதி, நிலைத் தன்மைக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படுவதும் மிகவும் அதிகரித்துள்ள தற்போதைய சூழ்நிலையில். பலர் தாங்கள் சட்டத்திலிருந்து 'விலக்கு' கொண்டவர்கள் என்றும் கருதுகின்றனர்.

ஆக தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களை கடுமையாகக் கையாள முடியும் என்பதை உறுதி செய்ய வலுவான சட்ட வழிமுறை பரிசீலிக்கப்பட வேண்டும் என்று மஹிமா நம்புகிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset