செய்திகள் மலேசியா
கார் ஆற்றில் விழுந்ததில் பெண் உயிரிழந்தார்
ஜெம்போல்:
இன்று காலை தான் ஓட்டிச் சென்ற கார் ஆற்றில் விழுந்ததில் 84 வயதுடைய முதிய பெண் உயிரிழந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் காலை சுமார் 10.45 மணியளவில் பத்து கிக்கிர் நகரில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது என்று ஜெம்போல் மாவட்ட போலிஸ் தலைவர் சூப்பிரிண்டெண்ட் நொர்ஹிஷாம் முஸ்தபா கூறினார்.
பெரோடுவா மைவி ரக காரை ஒட்டிச் சென்ற பாதிக்கப்பட்ட பெண் ஒரு கடையில் பொருட்களைக் கொடுத்து விட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர் ஒரு வளைவைக் கடந்து செல்லும் போது அவர் ஓட்டிய கார் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் விழுந்தது.
“பாதிக்கப்பட்டவர் தலையில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்,” என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவம் 1987 சாலை போக்குவரத்து சட்டம் பிரிவின் 41(1) கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்
.
மேலும், விசாரணைக்கு உதவ சாட்சிகள் முன்வருமாறு போலிஸ் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 6:53 pm
மலேசியாவின் ஆகச் சிறந்த 50 பெண் ஆளுமைகள்: ‘Her Next Chapter’ அங்கீகாரம்
March 10, 2026, 5:41 pm
பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு
March 10, 2026, 5:32 pm
ரமலான் மாதத்தில் குர்ஆன் அவமதிப்பு?: சபாவில் தீவிர விசாரணை தொடக்கம்
March 10, 2026, 5:31 pm
இந்துமதச் சின்னத்தை அவமதித்தது மிகையான செயல்: பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்
March 10, 2026, 4:51 pm
3ஆர் பிரச்சினைகளைத் தீர்க்க ஐஎஸ்ஏ சட்டம்; மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 10, 2026, 4:50 pm
