செய்திகள் மலேசியா
பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு
பெசுட்:
திரெங்கானு, பெசுட் பகுதியில் உள்ள கம்போங் கெலாம் மாஸ் பகுதியில், அரசுப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் இன்று காலை அவரது இல்லத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
பாதிக்கப்பட்ட 49 வயதுடைய அந்தப் பெண்ணின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகப் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், இன்று காலை 9.38 மணியளவில் காவல்துறை அங்கு விரைந்தது.
முதற்கட்ட விசாரணையில், அவர் உயிரிழந்து 24 மணி நேரத்திற்கும் மேலாகியிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இது குறித்து பெசுட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முஹம்மத் ரோசைம் அப் ரஹீம் கூறுகையில், "உடற்கூறாய்வு முடிவுகளின்படி, இதயத் தமனிகளில் ஏற்பட்ட அடைப்பு (Coronary Artery Atherosclerosis) காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“அவரின் உடலில் எவ்வித காயங்களோ அல்லது குற்றச் செயல்களுக்கான அறிகுறிகளோ இல்லை," என்று முஹம்மத் ரோசைம் தெரிவித்தார். ஏற்கனவே இதய நோய் பாதிப்பு கொண்டிருந்த அந்தப் பேராசிரியையின் மரணம், 'திடீர் மரணம்' என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 6:53 pm
மலேசியாவின் ஆகச் சிறந்த 50 பெண் ஆளுமைகள்: ‘Her Next Chapter’ அங்கீகாரம்
March 10, 2026, 5:32 pm
ரமலான் மாதத்தில் குர்ஆன் அவமதிப்பு?: சபாவில் தீவிர விசாரணை தொடக்கம்
March 10, 2026, 5:31 pm
இந்துமதச் சின்னத்தை அவமதித்தது மிகையான செயல்: பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்
March 10, 2026, 4:51 pm
3ஆர் பிரச்சினைகளைத் தீர்க்க ஐஎஸ்ஏ சட்டம்; மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 10, 2026, 4:50 pm
இனவாதத்தை தூண்டுபவர்களை ஹீரோவாக்க விரும்பவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
March 10, 2026, 4:22 pm
