செய்திகள் மலேசியா
ரமலான் மாதத்தில் குர்ஆன் அவமதிப்பு?: சபாவில் தீவிர விசாரணை தொடக்கம்
கோத்தா கினபாலு:
அல்-குர்ஆன் காலால் மிதிக்கப்பட்டு அதன் மேல் ஒழுங்கற்ற வரைபடங்கள் வரையப்பட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவியுள்ள படங்களின் தொடர்பில் சபா மாநில அரசு உடனடி விசாரணை நடத்தி வருகிறது. இந்தச் செயலைச் சபா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரே செய்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் எந்தச் செயல்களுக்கு ஒருபோதும் சமரசம் செய்யபட மாட்டாது என்று மாநில உள்ளாட்சி, வீடமைப்பு அமைச்சரும் மாநில மத விவகார செயற்குழு உறுப்பினருமான டத்தோ டாக்டர் முஹம்மத் அரிஃபின் முஹம்மத் அரிப் தெரிவித்துளார்.
“இந்தச் செயல் மிகவும் அவமதிப்பானதும் மிகையானதும் ஆகும். இது மதத்தின் மரியாதையைக் களங்கப்படுத்தும் முயற்சியாகவும், முஸ்லிம்களின் உணர்ச்சிகளைப் புண்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.
“சபா இஸ்லாமிய சபை (MUIS), சபா மாநில இஸ்லாமிய மத விவகாரத் துறை (JHEAINS), மலேசிய காவல் துறை மலேசிய தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் ஆகிய அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
“சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சட்டத்தின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
“குறிப்பாக ரமலான் மாதத்தில் அல்-குர்ஆனை அவமதிக்கும் இத்தகைய அவமரியாதையான செயல்களை எங்களால் ஒருபோதும் ஏற்க முடியாது. அல்-குர்ஆன் மிகவும் புனிதமான, உயர்ந்த மதிப்புடைய நூல்,” என்று இன்று வெளியான அறிக்கையில் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இத்தகைய மிகையான செயல் முஸ்லிம் சமூகத்தில் பதற்றத்தையும் கோபத்தையும் உருவாக்கக்கூடும். இதனால் சமூக ஒற்றுமையும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார்.
“இந்த விஷயத்தைவிகாரத்தை மக்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் எதிர்கொள்ள வேண்டும். அதிகாரிகள் சட்டத்தின் அடிப்படையில் உடனடியாக விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க அனுமதிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 6:53 pm
மலேசியாவின் ஆகச் சிறந்த 50 பெண் ஆளுமைகள்: ‘Her Next Chapter’ அங்கீகாரம்
March 10, 2026, 5:41 pm
பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு
March 10, 2026, 5:31 pm
இந்துமதச் சின்னத்தை அவமதித்தது மிகையான செயல்: பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்
March 10, 2026, 4:51 pm
3ஆர் பிரச்சினைகளைத் தீர்க்க ஐஎஸ்ஏ சட்டம்; மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 10, 2026, 4:50 pm
இனவாதத்தை தூண்டுபவர்களை ஹீரோவாக்க விரும்பவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
March 10, 2026, 4:22 pm
