செய்திகள் மலேசியா
நள்ளிரவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
சுங்கை பெட்டானி:
நள்ளிரவில் ஒரு இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், அவரது தங்கையின் கை துண்டாகும் நிலையில் காயமடைந்த சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் ஏழு நாட்கள் காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவரிகளில் இரண்டு ஆண்களும், ஒரு பெண்ணும் உட்பட மூவரும் இளவயதினரானவர்கள். அவர்கள் இன்று முதல் வரும் திங்கட்கிழமை வரை விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சுங்கை பெட்டானியில் உள்ள தாமான் கெம்பாஸ் பகுதியில் அதிகாலை நேரத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் என காவல்துறை நம்புகிறது.
சுமார் 20 வயதுகளில் உள்ள இளைஞர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால், பலமுறை வெட்டப்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
மேலும் அவரது தங்கை கடுமையாக காயமடைந்து, தற்போது சுல்தான் அப்துல் ஹலிம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்த இளைஞரின் உடல் மேலதிக விசாரணைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த வழக்கு கொலை குற்றச்சாட்டு, கடுமையான காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 5:32 pm
ரமலான் மாதத்தில் குர்ஆன் அவமதிப்பு?: சபாவில் தீவிர விசாரணை தொடக்கம்
March 10, 2026, 5:31 pm
இந்துமதச் சின்னத்தை அவமதித்தது மிகையான செயல்: பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்
March 10, 2026, 4:51 pm
3ஆர் பிரச்சினைகளைத் தீர்க்க ஐஎஸ்ஏ சட்டம்; மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 10, 2026, 4:50 pm
இனவாதத்தை தூண்டுபவர்களை ஹீரோவாக்க விரும்பவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
March 10, 2026, 4:22 pm
கார் ஆற்றில் விழுந்ததில் பெண் உயிரிழந்தார்
March 10, 2026, 4:22 pm
“தற்காலிக இடைநீக்கம் ஏன்? தவறு செய்திருந்தால் என்னை நீக்குங்கள்”: டத்தோ ஸ்ரீ ரொனால்ட் கியாண்டி
March 10, 2026, 4:08 pm
இன, மத உணர்வுகளைத் தூண்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: யுனேஸ்வரன்
March 10, 2026, 3:21 pm
