செய்திகள் மலேசியா
ஹரி ராயவை முன்னிட்டு 627 பட்டாசுகள் விற்பனையாளர்ளுக்கு அனுமதி
குவாந்தான்:
எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பாஹாங் காவல் துறை 627 பட்டாசுகள் விற்பனையாளர்ளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனுமதிகள் முழு பாஹாங் மாநிலத்திற்கான 648 விண்ணப்பங்களைப் பெற்ற பிறகு வழங்கப்பட்டதாகப் பாஹாங் மாநில போலிஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யாஹ்யா ஒத்மான் கூறினார்.
648 விண்ணப்பங்களில் 19 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதுடன் இரண்டு விண்ணப்பங்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன என்றார் அவர்.
“இதுவரை, அனுமதி இல்லாமல் விற்பனை செய்த குற்றச்செயல்களுக்கு எதிராக நான்கு பேர் கைது செய்யப்பட்டு பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார்.
எனவே, நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்காக, பட்டாசு விற்பனையாளர்களிடம் அவ்வப்போது கண்காணிப்பு, ஆய்வு நடவடிக்கைகள் 26 மார்ச் வரை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, செராட்டிங் டாமாய் பகுதியில் 17 பிப்ரவரி அன்று ஏற்பட்ட ஐந்து குடும்ப உறுப்பினர்களின் மரண சம்பவம் தொடர்பாக பிரேதப் பரிசோதனையின் முடிவுகளுக்குக் காத்து கொண்டிருப்பதாக யாஹ்யா கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 5:32 pm
ரமலான் மாதத்தில் குர்ஆன் அவமதிப்பு?: சபாவில் தீவிர விசாரணை தொடக்கம்
March 10, 2026, 5:31 pm
இந்துமதச் சின்னத்தை அவமதித்தது மிகையான செயல்: பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர்
March 10, 2026, 4:51 pm
3ஆர் பிரச்சினைகளைத் தீர்க்க ஐஎஸ்ஏ சட்டம்; மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 10, 2026, 4:50 pm
இனவாதத்தை தூண்டுபவர்களை ஹீரோவாக்க விரும்பவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
March 10, 2026, 4:22 pm
கார் ஆற்றில் விழுந்ததில் பெண் உயிரிழந்தார்
March 10, 2026, 4:22 pm
“தற்காலிக இடைநீக்கம் ஏன்? தவறு செய்திருந்தால் என்னை நீக்குங்கள்”: டத்தோ ஸ்ரீ ரொனால்ட் கியாண்டி
March 10, 2026, 4:08 pm
