நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

MYFutureJobs வீரர் தொழில் பாதுகாப்புத் திட்டம்; 5,000 முன்னாள் ஆயுதப்படையினருக்கு வேலை வாய்ப்பை இலக்காக கொண்டுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்

சுங்கைபூலோ:

MYFutureJobs வீரர் தொழில் பாதுகாப்புத் திட்டம் 5,000 முன்னாள் ஆயுதப்படையினருக்கு  வேலை வாய்ப்பை இலக்காக கொண்டுள்ளது.

மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இதனை கூறினார்.

பெர்கேசோ, முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் விவகாரக் கழகம், மலேசிய ஆயுதப்படை வீரர்கள் விவகாரத் துறை ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

இந்த விழாவில் தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ காலிட் நோர்டின் கலந்துக் கொண்டதில் மகிழ்ச்சியுடன் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் வெறும் அடையாளப்பூர்வமானது மட்டுமல்ல.

ஒவ்வொரு முன்னாள் படைவீரருக்கும் வேலை வாய்ப்புகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவை கட்டமைக்கப்படுவதில் கவனம் செலுத்தப்படுகிறது.

அதே வேளையில் இந்த ஒத்துழைப்பின் மூலம் பல முக்கிய விஷயங்கள் வலியுறுத்தப்படுகின்றன.

முதலாவதாக,  முன்னாள் படைவீரர்களின் அடையாளங்களை அதிகாரப்பூர்வமாக சரிபார்ப்பதுடன் முன்னாள் படைவீரர்கள் மட்டுமே வேலை வாய்ப்புகள், சமூகப் பாதுகாப்பைப் பெற முடியும் என்று அவர் கூறினார்.

முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கான MYFutureJobs திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து (2021-2025), 14,000க்கும் மேற்பட்ட முன்னாள் படைவீரர்கள் MYFutureJobs இல் பதிவு செய்துள்ளனர்.

பல்வேறு வேலைத் துறைகளில் 5,530 முன்னாள் படைவீரர்களை வெற்றிகரமாக பணியமர்த்தியுள்ளனர்.

கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும், 573 முன்னாள் படைவீரர்கள் புதிய தொழில்களைத் தொடங்கியுள்ளனர்.

உற்பத்தித் துறை 161 முன்னாள் படைவீரர்களை ஆட்சேர்ப்பு செய்த மிக உயர்ந்த துறையாகும்.

அதைத் தொடர்ந்து சேவை, தொழில்நுட்பத் துறைகள் இதில் அடங்கும்.

2026ஆம் ஆண்டில் MYFutureJobs வீரா தொழில் பாதுகாப்பு திட்டம் மேலும் வலுப்படுத்தப்படும். மேலும் மிகவும் தீவிரமான இலக்கை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

40 சதவீத குறைந்தபட்ச வேலை வாய்ப்பு விகிதத்துடன் 2,500 க்கும் மேற்பட்ட வீரர்களை இத்திட்டம் இலக்காக கொண்டுள்ளது.

எனவே ஐந்து ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது 5,000 முன்னாள் ஆயுதப்படை வீரர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

இளம் பட்டதாரிகளான முன்னாள் படைவீரர்களுக்கு, வேகமான, கட்டமைக்கப்பட்ட தொழில் உந்துதலைப் பெறுவதற்காக, குறிப்பாக ஒரு தொழில் துவக்கப் பாதை திட்டத்தை செயல்படுத்தப்படும்.

அதே வேளையில் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு திறன் பயிற்சிகளுடம் அவர்களுக்கு நியாயமாம ஊதியத்தையும் இத்திட்டம் உறுதி செய்யும் என்று டத்தோஸ்ரீ ரமணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset