நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக சிக்கிய காதல் ஜோடிகள்; இஸ்லாமிய சமயத் துறையினரால் கைது

ஜொகூர் பாரு: 

ஹரிராயா பெருநாளுக்குப் பிறகு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்த ஜோடிகள், அதிகாலை நேரத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில், இணைந்து இருந்த குற்றத்திற்காக இஸ்லாமிய சமயத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து வந்த தகவலின் அடிப்படையில் அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அதிகாரிகள் அந்த குடியிருப்பு வளாகத்தில் சோதனை நடத்தினர். சமயத் துறை அதிகாரிகள், பாதுகாப்பு காவலரிடம் தங்களை அறிமுகப்படுத்திய பின்னர் குறிப்பிட்ட வீட்டிற்கு சென்று கதவை பலமுறை தட்டினர். சுமார் 10 நிமிடங்களுக்கு பிறகு ஒரு ஆண் கதவைத் திறந்தார்.

வீட்டின் உள்ளே சோதனை செய்த போது, அவருடன் ஒரு பெண் அங்கு இருப்பதும் கண்டறியப்பட்டது.

ஆரம்பகட்ட விசாரணையில், இருவரும் இன்னும் திருமணம் ஆகாதவர்கள் என்றும், நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில்  நோன்புப் பெருநாளுக்குப் பிறகு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

அந்த வீடு சமீபத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்டதாகவும், திருமணத்திற்குப் பிறகு இருவரும் அங்கு வசிக்க திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஜோடிகள் மாநில இஸ்லாமிய குற்றச் சட்டத்தின் பிரிவு 27இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset