நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜம்ரி வினோத் மீதான தாக்குதல் வழக்கு: விசாரணைக்கு ஒத்துழைக்க முன்வந்த நான்கு ஆடவர்கள் 

புக்கிட் மெர்த்தாஜாம்: 

மத போதகர் ஜம்ரி வினோத் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளுக்கு உதவுவதற்காக, இன்று அதிகாலை நான்கு பேர் காவல்துறையிடம் சரணடைந்ததுடன் இரண்டு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது மூலம் அச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறு பேராக அதிகரித்துள்ளது.

விசாரணையை நிறைவேற்ற போலிசார் நீதிமன்றத்தில் நான்கு நாட்கள் தடுப்பு காவல் மனு கோரிய நிலையில் நீதிபதி ரோஷாயத்தி ராடெல்லா அவர்களை இரண்டு நாள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது என்றும் இது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது என்றும் அவர்களின் வழக்கறிஞர் வி. பார்த்திபன் கூறினார்.

"புகாராளி தாக்குதலாளர்கள் கல், மரக்கட்டையை வைத்திருந்தனர் என்று புகார் அளித்துள்ளார். இருப்பினும் வீடியோவில் யாரும் எதையும் வைத்திருக்கவில்லை என்று தெளிவாக காணப்படுகிறது. வீடியோவில் எல்லா நபர்களும் கார் ஓட்டுநரைக் கவனித்திருந்தனர். சேதம் இடது பக்கத்தில் ஏற்பட்டது என்பது தெளிவாக தெரிகிறது," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பார்த்திபன், புவிராஜன், துருவந்த்ரன் ஆகிய வழக்கறிஞர்கள் குற்றம் தொடர்பான பிரிவு 506 (குற்றச்செயல் அச்சுறுத்தல்) இந்த வழக்கில் பொருந்தாது என வாதிட்டனர்.

"வழக்கின் விசாரணைகளுக்கு உதவுவதற்காக எனது கட்சிக்காரர் முழு ஒத்துழைப்பு அளித்து இன்று காலை சரணடைந்தார்," என்று அவர் கூறினார்.

முன்னதாக, இச்சம்பவம் தொடர்பாக இரு சகோதரர்கள் தனித்தனியாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

ஜம்ரியிடமிருந்து புகார் பெறப்பட்டதாக பினாங்கு மாநில காவல் துறை தலைவர் டத்தோ அசீஸி இஸ்மாயில் உறுதி செய்தார்.

-சங்கீர்த்தனா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset