செய்திகள் மலேசியா
நோன்புப் பெருநாளை முன்னிட்டு HMMP கீழ் 27 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன: KPDN
அம்பாங்:
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, 14 முதல் 28 மார்ச் வரை 15 நாட்களுக்கு பண்டிகைக் கால அதிகபட்ச விலைத் திட்டத்தின் (SHMMP) கீழ் மொத்தம் 27 அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
இது கடந்த ஆண்டில் SHMMP கீழ் பட்டியலிடப்பட்ட 26 பொருட்களை விட அதிகமாக உள்ளது என்று உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவினங்களின் (KPDN) அமைச்சர், டத்தோ அர்மிசான் முஹம்மத் அலி தெரிவித்தார்.
இந்த ஆண்டின் பட்டியலில் புதிய சேர்க்கை ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதியான டால் வகை பருப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
“திட்டத்தின் அமலாக்க காலம் 1 ஷாவால் முன்னர் ஏழு நாட்கள், பண்டிகை நாள், அதன்பிறகு ஏழு நாட்கள் வரை இருக்கும்.
"அல்ஹம்துலில்லாஹ், போதுமான விநியோகம், முன்னர் ரிங்கிட் மதிப்பு வலுப்பெற்றதும் இதற்கு ஒரு காரணியாக இருக்கலாம்," என்று அவர் இன்று SHMMP ஹரி ராயா அய்டில்ஃபித்ரி, ரஹ்மா மடானி விற்பனை திட்டத்தை அறிவிக்கும் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
மொத்த பட்டியலில், தீபகற்ப மலேசியாவில் ஒன்பது பொருட்களின் அதிகபட்ச விலை நிலைநிறுத்தப்பட்டிருப்பதாகவும், 13 பொருட்கள் கடந்த ஆண்டின் விலையை விட குறைந்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், சராவாக்கில் 11 பொருட்கள், சபாவில் 12 பொருட்களின் விலை குறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
பொருட்களின் முழு பட்டியலை மக்கள் KPDN இணையதளம் www.kpdn.gov.my மூலம் பார்க்கலாம்.
மேலும், ரஹ்மா மடானி விற்பனைத் திட்டம் அய்டில்ஃபித்ரிக்கு முன் 1,898 நிகழ்ச்சி தொடர்களை நடத்தியிருப்பதாகவும் அவர் கூறினார்.
நேற்று வரை 910 நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன என்றும் மீதம் 988 நிகழ்ச்சிகள் 1 ஷாவால் முன்பு வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 4:51 pm
3ஆர் பிரச்சினைகளைத் தீர்க்க ஐஎஸ்ஏ சட்டம்; மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 10, 2026, 4:50 pm
இனவாதத்தை தூண்டுபவர்களை ஹீரோவாக்க விரும்பவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
March 10, 2026, 4:22 pm
கார் ஆற்றில் விழுந்ததில் பெண் உயிரிழந்தார்
March 10, 2026, 4:22 pm
“தற்காலிக இடைநீக்கம் ஏன்? தவறு செய்திருந்தால் என்னை நீக்குங்கள்”: டத்தோ ஸ்ரீ ரொனால்ட் கியாண்டி
March 10, 2026, 4:08 pm
இன, மத உணர்வுகளைத் தூண்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: யுனேஸ்வரன்
March 10, 2026, 3:21 pm
ஹரி ராயவை முன்னிட்டு 627 பட்டாசுகள் விற்பனையாளர்ளுக்கு அனுமதி
March 10, 2026, 3:16 pm
