செய்திகள் மலேசியா
மருத்துவர் பயிற்சியாளர் உயிரிழப்பு: விசாரணை தொடர்கிறது
கோத்தா பாரு:
கடந்த வெள்ளிக்கிழமை கோலா கிரையில் உள்ள மருத்துவமனை மாணவர் இல்லத்தில் ஒரு பெண் பயிற்சி மருத்துவர் உயிரிழந்த சம்பவத்தில் தற்போது 10க்கும் மேற்பட்ட நபர்களிடம் போலிஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விசாரணை சம்பவ நிகழ்ந்த தினத்திலிருந்து இன்று வரை தொடர்ந்துள்ளதாக கிளந்தான் மாநில காவல் துறை தலைவர், டத்தோ முஹம்மத் யூசுப் மாமட் தெரிவித்துள்ளார்.
“பாதிக்கப்பட்டவரின் நண்பர்கள், ஆசிரியர்கள், குடும்பத்தினர் விசாரிக்கப்பட்டனர்.
“விசாரணை மூலம் பல தகவல்களைப் பெற்றுள்ளோம். அதில் மன அழுத்தம் போன்ற காரணங்களும் அடங்கும். ஆயினும், விசாரணை இன்னும் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையைக் கிளந்தான் காவல் தலைமையகம் (IPK) மேற்கொண்டு வருகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட அப்பெண் இன்னும் படித்து வருவதாகவும், மருத்துவமனையில் பயிற்சியை தொடர்ந்ததாகவும் குறிப்பிடப்பட்டது என்றார் அவர்.
கிளந்தான் சுகாதாரத் துறை இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க ஒரு குழுவை அமைத்துள்ளது. இந்தக் குழு சம்பவத்தின் காரணங்களை, வேலை இடத்தின் மன அழுத்தம் உட்பட பிற பங்களிப்புத் காரணிகளையும் கவனத்தில் கொண்டு பரிசீலிக்கும் என்று அதன் தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மத் அஸ்மான் யாக்கோப் தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கடந்த வெள்ளிக்கிழமை, 29 வயதான அந்தப் பெண் மாணவர் காலை 9.55 மணிக்கு மருத்துவமனை மாணவர் இல்லத்தில் உள்ள அறையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 10, 2026, 4:51 pm
3ஆர் பிரச்சினைகளைத் தீர்க்க ஐஎஸ்ஏ சட்டம்; மீண்டும் அமல்படுத்தப்பட வேண்டும்: டத்தோ சிவக்குமார்
March 10, 2026, 4:50 pm
இனவாதத்தை தூண்டுபவர்களை ஹீரோவாக்க விரும்பவில்லை: டத்தோஸ்ரீ ரமணன்
March 10, 2026, 4:08 pm
இன, மத உணர்வுகளைத் தூண்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை: யுனேஸ்வரன்
March 10, 2026, 3:21 pm
ஹரி ராயவை முன்னிட்டு 627 பட்டாசுகள் விற்பனையாளர்ளுக்கு அனுமதி
March 10, 2026, 3:20 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு HMMP கீழ் 27 பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன: KPDN
March 10, 2026, 3:16 pm
நள்ளிரவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு
March 10, 2026, 3:15 pm
அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக சிக்கிய காதல் ஜோடிகள்; இஸ்லாமிய சமயத் துறையினரால் கைது
March 10, 2026, 12:43 pm
