நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உணவு விநியோக ஊழியர் கார் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார்

மலாக்கா: 

உணவு விநியோக ஊழியர் ஒருவர் நேற்று மாலை, பத்து பெரெண்டாம் அருகே உள்ள தாமான் இக்ஸான் சாலை பகுதியில் யூ-டர்ன் செய்யும்போது கார் மீது மோதி உயிரிழந்தார்.

மலாக்கா போக்குவரத்து விசாரணை, அமலாக்கத் துறை தலைவர் முஹம்மத் ஜாக்கி ராமத் தெரிவித்ததாவது, இந்த சம்பவம் மாலை 7.05 மணியளவில் நடந்தது. 31 வயது உள்ளூர் ஆண் ஹோண்டா C100 மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கொண்டிருந்த போது 66 வயது உள்ளூர் நபர் ஓட்டிச் சென்ற டொயோட்டா கொரோலா கிராஸ் ஹைப்ரிட் கார் மோதி விபத்துகுள்ளானது.

இந்த தாக்குதலில், உணவு விநியோக ஊழியரின் தலையிலும், உடலிலும் கடுமையான காயம் ஏற்பட்டு, அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.

தற்போது அவரின் சடலம் மலாக்கா மருத்துவமனையில் தடவியல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிளும், காரும் புஸ்பாகோம் அலோர் காஜா நிலையத்தில் தொழில்நுட்ப பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த சம்பவம், சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது என்று முஹம்மத் ஜாக்கி தெரிவித்தார்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset