செய்திகள் உலகம்
வேற்றுமையில் ஒற்றுமை: சிங்கப்பூரில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைத்த அழகிய நோன்புத் திறப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, பரஸ்பர மரியாதையை வலுப்படுத்தும் நோக்கில், ஸ்ரீ நாராயண மிஷன் – சிங்கப்பூர் அமைப்பு, ராயல் கிங்ஸ் குழுமம் ஆதரவுடன் நோன்பு திறப்பு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வு 06 மார்ச் 2026 (வெள்ளிக்கிழமை) மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை, எஸ்.என்.எம் நர்சிங் ஹோம், ரிவர்வாக், 2 யிஷுன் லேன், என்ற இடத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் முக்கிய விருந்தினராக சிங்கப்பூர் கல்வி அமைச்சகம், தேசிய வளர்ச்சி அமைச்சகத்தின் மூத்த பாராளுமன்ற செயலாளர் டாக்டர் சையத் ஹாருன் அல்ஹப்ஸி கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
தனது உரையில் அவர், சிங்கப்பூரின் சமூக ஒற்றுமை, மத நல்லிணக்கம், பல்வேறு கலாச்சாரங்கள் இணைந்து வாழும் தேசிய மதிப்புகள் குறித்து வலியுறுத்தினார்.
பல்வேறு மதங்கள், மொழிகள், கலாச்சாரங்களை சேர்ந்த மக்கள் ஒற்றுமையுடன் வாழும் நாடாக சிங்கப்பூர் உலகளவில் முன்னுதாரணமாக திகழ்கிறது. அந்த உயர்ந்த மதிப்பை முன்னிறுத்தும் வகையில் இந்த இஃப்தார் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
சிங்கப்பூரின் பல்வேறு மதத் தலைவர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள் மற்றும் பல சமூகங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு நல்லிணக்கத்தின் செய்தியை வெளிப்படுத்தினர். இது சிங்கப்பூரின் “வேற்றுமையில் ஒற்றுமை” என்ற தேசிய அடையாளத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறப்பான நிகழ்வாக இது அமைந்தது.
ஸ்ரீ நாராயண குருவின் மனிதநேயக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்ரீ நாராயண மிஷன் – சிங்கப்பூர், பல ஆண்டுகளாக சமூக சேவை, முதியோர் பராமரிப்பு, மனிதநேய பணிகளில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
மனித சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் இந்த அமைப்பு, சிங்கப்பூரில் பல்வேறு சமூகங்களை ஒன்றிணைக்கும் நிகழ்வுகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. அந்த முயற்சியின் ஒரு முக்கிய பகுதியாக இந்த இஃப்தார் நிகழ்வு அமைந்தது.
இந்த நிகழ்வில் ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான சிராஜுதீன், ஸ்ரீ நாராயண மிஷன் நிர்வாகத்துடன் இணைந்து முக்கிய விருந்தினரை அன்புடன் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து ராயல் கிங்ஸ் குழுமத்தின் மூத்த பொதுமக்கள் தொடர்பு அலுவலர் ஹாரிஸ் உரையாற்றி, சமூக ஒற்றுமை, மனிதநேய பணிகளில் ராயல் கிங்ஸ் குழுமம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்து விளக்கினார். மேலும் அவர் ராயல் கிங்ஸ் குழுமத்தின் நிர்வாகக் குழுவினரையும் அறிமுகப்படுத்தினார்.
இந்த நிகழ்வில் ராயல் கிங்ஸ் குழுமத்தின் மூத்த ஆலோசகர் ஜலாலுதீன், இயக்குநர் இப்ராஹிம், தகவல் தொழில்நுட்பத் தலைவர் ரியாஸுதீன், உலகளாவிய வர்த்தக செயல்பாட்டு தலைவர் திரு வரின், விருந்தோம்பல் செயல்பாட்டு தலைவர் ஆரிஃப் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
ஒற்றுமையை பிரதிபலித்த இஃப்தார்
நிகழ்வின் இறுதியில், பல்வேறு மதங்கள், சமூகங்களை சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து நோன்பு திறப்பு உணவை பகிர்ந்து கொண்டனர்.
இது சிங்கப்பூரின் மத நல்லிணக்கம், பரஸ்பர மரியாதை, சமூக சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் அழகிய தருணமாக அமைந்தது.
இந்த நிகழ்வு சிங்கப்பூரில் பல்வேறு சமூகங்களை இணைக்கும் ஒற்றுமையின் விழாவாக அனைவராலும் பாராட்டப்பட்டது.
- ரியாஸ்
தொடர்புடைய செய்திகள்
April 28, 2026, 3:59 pm
நான் ஒன்றும் பாலியல் குற்றவாளி அல்ல: செய்தியாளர்கள் சந்திப்பில் கடுப்பான ட்ரம்ப்
April 28, 2026, 3:06 pm
விளையாட்டு வினையானது: காற்சட்டைக்குள் புகுந்த பாம்பு கடித்ததில் ஜெர்மனி பயணி பலி
April 28, 2026, 3:04 pm
இந்தோனேசியாவை உலுக்கிய 'லிட்டில் அரேஷா' விவகாரம்: தலைமை ஆசிரியர் உள்பட 13 பேர் கைது
April 28, 2026, 12:45 pm
விளையாட்டு வினையானது: விமானத்தில் வெடிகுண்டு வதந்தி பரப்பிய பயணி கைது
April 28, 2026, 11:50 am
இந்தோனேசியாவில் ரயில் விபத்து: 7 பேர் மரணம்
April 27, 2026, 5:36 pm
தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம்: சமூக வலைதள வதந்திகளால் யாத்ரீகர்களிடையே குழப்பம்
April 27, 2026, 3:20 pm
5 ஆண்டுகளாக அறையில் பூட்டி வைக்கப்பட்ட 191 சடலங்கள்; தம்பதிக்கு 60 ஆண்டுகள் சிறை
April 27, 2026, 12:12 pm
இந்தியானா பல்கலைக்கழகத்திற்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் காயம்
April 27, 2026, 12:12 pm
