செய்திகள் உலகம்
ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திடீர் அறிவிப்பு
வாஷிங்டன்:
மத்திய கிழக்கு நாடுகளின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்படுகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரான் இடையே கடந்த பிப்.28-ம் தேதி போர் தொடங்கியது. கடந்த ஏப்.8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.
ஜூன் 17-ஆம் தேதி இரு நாடுகள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற சில சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
இதன்காரணமாக கடந்த ஜூலை 13-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கியது. ஈரானின் ராணுவ தளங்கள், ஆயுத உற்பத்தி ஆலைகள், ஆயுதக் கிடங்குகள், உள்கட்டமைப்புகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் அதிதீவிர தாக்குதல்களை நடத்தியது.
இதற்கு பதிலடியாக ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ராணுவம் ஏவுகணை, ட்ரோன்கள் மூலம் தீவிர தாக்குதல்களை நடத்தியது.
சமீபத்தில் கிடைத்த தகவலின்படி ஈரான் அனுப்பும் ஏவுகணைகளை மறித்து அழிக்கும் ரேடார் தடுப்பான்கள் இல்லாமல் அமெரிக்கா தவித்து வருகிறது. இருப்பு குறைந்துவிட்டதால் வேறு வழியில்லாமல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
