செய்திகள் உலகம்
டெலிகிராம் CEO சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியாக ரஷ்யா அதிரடியாக அறிவித்தது
மாஸ்கோ:
தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் காரணமாக டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ரஷ்யாவின் பிரதான உள்நாட்டு பாதுகாப்பு முகமை கூறியதாவது:
ரஷ்யாவில் சைபர் மோசடி, கூட்டுப் படுகொலை, தீவிரவாதம், பல்வேறு நாசவேலைகளை திட்டமிடும் உக்ரைன் உளவுத்துறை, தீவிரவாத அமைப்புகள் திட்டமிடவும், அதை அரங்கேற்றவும் டெலிகிராம் தளத்தை பயன்படுத்துகிறது.
அப்படி டெலிகிராமில் ஆக்டிவாக உள்ள சேனல்கள், சாட்களை அந்நிறுவனம் நீக்க தவறியது. அதனால் தீவிரவாதத்துக்கு உதவிய குற்றச்சாட்டில் டெலிகிராம் மெசஞ்சர் சிஇஓ பவெல் துரோவை தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அதிரடியாக அறிவித்துள்ளது.
ரஷ்யாவில் டெலிகிராம் செயலி தடை செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, தன் மீது ரஷ்யா கிரிமினல் விசாரணையை தொடங்கியதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பவெல் துரோவ் கூறியிருந்தார்.
தங்களது டெலிகிராம் செயலியை தடை செய்ய இந்த குற்றச்சாட்டு ஜோடிக்கபப்ட்டதாகவும், கருத்து சுதந்திரம், பிரைவசி உரிமைகள் நசுக்கப்படுவதாகவும் அவர் குற்றச்சாட்டு வைத்தார்.
இந்நிலையில், அவரை சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளி என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
41 வயதான அவர், ரஷ்ய நாட்டை சேர்ந்தவர். அவரது டெலிகிராம் தளம் அந்நாட்டில் மிகவும் பிரபலம். அதிகளவிலான மக்கள் அதனை அங்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்த தளம் அங்கு தடை செய்யப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
