செய்திகள் உலகம்
சவூதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ட்ரோன் தாக்குதல்: பெரும் தீ விபத்து
ரியாத்:
உலக அளவில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகங்களில் ஒன்றான சவூதி அரேபியாவின் அப்கேக் ஆலையை குறிவைத்துத் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
நாசாவின் தீ கண்காணிப்புத் தரவுகளும், ஐரோப்பிய ஒன்றியத்தின் காப்பர்நிகஸ் சென்டினல்-2 செயற்கைக்கோள் படங்களும் அப்கேக் வளாகத்திலிருந்து அடர்ந்த புகை மேகங்கள் எழும் காட்சிகளைப் பதிவு செய்துள்ளன. உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதம் வரை கையாளும் இந்த ஆலை, சர்வதேச சந்தையில் மிக முக்கியமான ஆற்றல் மையமாகக் கருதப்படுகிறது.
ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தைத் தவிர்க்கும் பொருட்டு, சவூதி அரேபியா தனது கிழக்கு மாகாணங்களிலிருந்து செங்கடலில் உள்ள ‘யான்பு துறைமுகத்திற்கு எண்ணெய் அனுப்பக் கிழக்கு-மேற்கு குழாய்களைப் பயன்படுத்தி வந்தது. இந்த வழித்தடத்தையே ஹவுதி போராட்டவாதிகள் குறிவைத்துள்ளனர்.
சவூதி விமானப்படை யேமனிலுள்ள ஹவுதி இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்தியதன் விளைவே இது என்று கூறப்படுகிறது
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
