செய்திகள் உலகம்
ஜூலை 23ஆம் தேதி வான்போக்குவரத்து சேவையில் புதிய சாதனை: 24 மணி நேரத்திற்குள் 1,53,359 வணிகப் பயன்பாட்டு விமானப் பயணங்களைப் பதிவுசெய்தது
வாஷிங்டன்:
2026 ஆம் ஆண்டு ஜூலை 23 அன்றுது உலகளாவிய வான்வழிப் போக்குவரத்தில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
வரலாற்றிலேயே மிக அதிக வணிக விமானங்கள் இயக்கப்பட்ட நாளாகக் கருதப்படும் இந்த சாதனை, முக்கியச் சந்தைகளில் பயணிகளின் தேவை சீரற்ற முறையில் இருக்கும் நிலையிலும், பெருந்தொற்று காலத்திற்குப் பிந்தைய விமானத் துறையின் மீட்சியைக் காட்டுகிறது.
இந்தச் சாதனை எண்ணிக்கையில் திட்டமிடப்பட்ட பயணிகள் விமானங்கள், சாட்டர் விமானங்கள் மற்றும் சரக்குச் சேவைகள் ஆகிய அனைத்துப் பிரிவுகளும் அடங்கியுள்ளன.
ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான விமானங்கள் பறந்ததை பிளைட்ரடார்24 தரவு வெளிப்படுத்தியது.
அதிக எண்ணிக்கையிலான விமானங்கள் இயக்கப்பட்ட போதிலும், சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் மே மாதத்தில் உலகளாவிய பயணிகளின் தேவையில் கடந்த ஆண்டை விட 2.2 சதவீதம் சரிவு பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, உள்நாட்டுப் போக்குவரத்து ஒட்டுமொத்தமாக 3.1 சதவீதம் குறைந்த நிலையில், அமெரிக்காவின் உள்நாட்டுத் தேவை 1.9 சதவீதமும், சீனாவின் உள்நாட்டுச் சந்தை 6.2 சதவீதமும் சரிவைக் கண்டன.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 16, 2026, 3:59 pm
ஏ.ஐ மூலம் தேர்வில் மோசடி செய்து முதலிடம் பிடித்த மாணவர்: போலிஸ் விசாரணை
November 13, 2026, 10:47 am
உலகம் முழுவதும் MICROSOFT 365 சேவைகள் முடக்கம்
November 12, 2026, 10:37 pm
கள்ள உறவு சர்ச்சை - என்விடியா CEO ஜென்சன் ஹுவாங் ராஜினாமா
November 12, 2026, 6:06 pm
பெல்ஜியத்தில் புதிய கழிவுநீர் குழாய்க்காகத் தோண்டும்போது, 9 மில்லியன் யூரோ மதிப்புள்ள தங்கம் கண்டெடுப்பு
November 11, 2026, 1:15 pm
புதைக்கப்பட்டு 24 மணி நேரத்திற்கு பின் 11 மாதக் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது
November 11, 2026, 11:46 am
காசாவில் இஸ்ரேல் ராணுவத்தினரின் தொடர் தாக்குதல் காரணமாக பொதுமக்கள் எழுவர் பலி
November 11, 2026, 11:39 am
அதிக சத்தத்துடன் பாட்டு போட்டதைத் தட்டி கேட்ட போலிஸ் அதிகாரியை பாராங்கத்தியுடன் இருவர் துரத்திய சம்பவம்
November 10, 2026, 10:45 am
BREAKING NEWS: Nvidia CEO சீன நிர்வாகியுடன் கள்ளத் தொடர்பு: ஒப்புக்கொண்டார் ஜென்சன் ஹுவாங்
November 9, 2026, 3:02 pm
காட்டுத்தீ அணைக்கும் முயற்சியில் ஹெலிகாப்டர் விழுந்தது: ஒருவர் பலி
November 7, 2026, 12:38 pm
