செய்திகள் உலகம்
அர்ஜெண்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது: எழுவர் பலி
பியுனொஸ் அய்ரெஸ்:
அர்ஜெண்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எழுவர் பலியானார்கள்
அர்ஜெண்டினா நாட்டின் சன் உவான் மாகாணத்தில் இந்த விபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல நாட்களாக எரிந்து கொண்டிருந்த காட்டுத்தீயை அணைக்க உதவுவதற்காக அண்டை மாகாணத்திற்குச் செல்வதற்கு முன்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெல் 412 விமானம், இஷிகுவாலாஸ்டோ இயற்கை பூங்காவில் விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் பயணம் செய்த தீயணைப்பு வீரர்கள், போலிஸ் அதிகாரிகள் மற்றும் பொது தற்காப்பு அதிகாரிகள் ஆகியோர் மாண்டதாக தெரிவிக்கப்பட்டது
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்புத்துறையினர் விரைந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தைத் தொடர்ந்து, சான் ஜுவான் உள்ளாட்சி அமைப்பு மூன்று நாட்கள் துக்க அனுசரிப்பை அறிவித்துள்ளது.
இந்த நாட்களில் தேசிய மற்றும் மாகாணக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
விமானிகளுக்குள் சண்டை: துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு பறந்துகொண்டிருந்த விமானம் சவுதியில் தரை இறங்கியது
September 30, 2026, 10:37 am
கலிபோர்னியா மாகாணத்தில் நோன்பு & ஹஜ் பெருநாளுக்கு அதிகாரப்பூர்வ பொது விடுமுறை அறிவிப்பு
September 30, 2026, 10:34 am
மொராக்கோ நாட்டின் முதல் பெண் பிரதமராக ஃபாத்திமா எஸாரா எல் மன்சோரி நியமிக்கப்பட்டார்
September 29, 2026, 10:02 pm
ERP 2 - இனி சிங்கப்பூர் சாலைகளில் நீலக் குறியீடுகள்
September 29, 2026, 9:52 pm
தென் லெபனானைக் கடுமையாகத் தாக்கிய இஸ்ரேல்
September 29, 2026, 5:01 pm
