செய்திகள் இந்தியா
தனக்கு பிறந்த மகள் அல்ல என்ற சந்தேகத்தினால் 10 வயது சிறுமியை கொன்ற தந்தை கைது
டெல்லி:
தனக்கு பிறந்த மகள் அல்ல என்ற சந்தேகத்தின் காரணமாக 10 வயது சிறுமியை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை இந்திய காவல்துறை கைது செய்துள்ளது.
இந்த சம்பவம் ஜம்மு பகுதியில் இடம்பெற்றதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர் ரமேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காவல்துறையின் தகவலின்படி, கட்டிடத் தொழிலாளியாக வேலை செய்த ரமேஷ் குமார், தனது மகளின் தலையில் மரக்கட்டையால் தாக்கியதில் சிறுமி கடுமையாக காயமடைந்தார்.
பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த சிறுமி அங்கு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த நபர் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு கொலை வழக்கிலும் தேடப்பட்டவர் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் பத்து ஆண்டுகளாக வேறு பெயரில் மறைந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
டெல்லியில் அவரது போலி அடையாளம் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் மேலதிக விசாரணைக்காக ஜம்மு, காஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
