செய்திகள் இந்தியா
ரஷ்ய எண்ணெய் இறக்குமதியைத் தொடர இந்தியா முடிவு
புது டெல்லி:
மத்திய கிழக்கில் நடைபெறும் போரின் காரணமாக மாஸ்கோவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்க தற்காலிகச் விலக்கு வழங்கிய பின்னரும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்று சனிக்கிழமை தெரிவித்தது.
அதே நேரத்தில், இந்த கொள்முதல்களுக்கு வாஷிங்டனின் அனுமதி தேவையில்லை என்றும் இந்தியா கூறியது. முன்னதாக டிரம்ப் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளார் என்ற செய்தி வெளியில் வந்தது. இந்திய எதிர்க் கட்சிகள் கடுமையாக எதிர்வினை ஆற்றியதால் இப்போது வாஷிங்டனின் அனுமதி தேவையில்லை என்று மோடி அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்கவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய நடவடிக்கைகளும் அதற்கு ஈரான் வளைகுடா பிராந்தியத்தில் மேற்கொண்ட பதிலடி தாக்குதல்களும் உலகின் எரிசக்தி, போக்குவரத்து துறைகளைப் பாதித்துள்ளதுடன், உலகளாவிய எண்ணெய் விலைகளும் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், வியாழக்கிழமை கடலில் சிக்கித் தங்கியிருந்த ரஷ்ய எண்ணெயை இந்தியா வாங்க அனுமதிக்க அமெரிக்க ரஷ்யாவுக்கு விதித்திருந்த பொருளாதார தடைகளைத் தற்காலிகமாகத் தளர்த்தியது.
இருப்பினும், இந்த வகை கொள்முதல்களுக்கு “குறுகிய கால சலுகை” மீது இந்தியா சார்ந்திருக்கவில்லை என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
“ரஷ்ய எண்ணெயை வாங்குவதற்கு இந்தியா எந்த நாட்டின் அனுமதியையும் ஒருபோதும் சார்ந்திருக்கவில்லை,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“2026 பிப்ரவரி மாதத்திலும் இந்தியா இன்னும் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது, மேலும் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாகவே ரஷ்யா உள்ளது,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன், டி.சி. கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்திய ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 25% வரியைக் குறைத்தது. இது, இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக நியூடெல்லி “உறுதி அளித்தது” என்ற காரணத்தால் மேற்கொள்ளப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
இருப்பினும், அந்த வாக்குறுதி இருநாடுகளின் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. மேலும் இந்திய அரசு அதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ செய்யவில்லை. இந்தியாவின் எண்ணெய் கொள்முதல் தேசிய நலன் அடிப்படையில் நடைபெறுகிறது என்ற நிலைப்பாட்டைத் தொடர்ந்து வைத்துள்ளது.
250 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் இந்தியாவிடம் இருப்பதாகவும், குறுகிய கால தடங்கல்களைச் சமாளிக்க அது போதுமானதாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை இந்தியா வீட்டு சமையலுக்குப் பயன்படுத்தப்படும் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) சிலிண்டர் விலையை 7% உயர்த்தியுள்ளது.
உலகளவில், வெள்ளிக்கிழமை கச்சா எண்ணெய் விலை 8.5% உயர்ந்தது, மேலும் அந்த வாரத்தில் மொத்தமாக சுமார் 30% உயர்வு பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு போர் முடிவடைய ஈரான் “நிபந்தனை இல்லாத சரணடைவு” செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்ததையடுத்து இந்த உயர்வு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு, இந்த வாரத்தின் ஆரம்பத்தில் இந்தியாவின் பெட்ரோலியம் அமைச்சகம் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு LPG உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டது. அதற்காக ப்ரோப்பேன், பியூட்டேன் வாயுக்கள் உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
தகவல் பகுப்பாய்வு நிறுவனம் Kpler வெளியிட்ட தரவுகளின்படி, LPG வாங்கும் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்றும் அதன் 90% க்கும் அதிகமான LPG விநியோகம் மத்திய கிழக்கிலிருந்து பெறப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
March 6, 2026, 7:16 am
தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி மேற்கு வங்கத்துக்கு மாற்றம்: மேற்கு வங்க கவர்னர் திடீர் ராஜினாமா
March 4, 2026, 2:09 pm
ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள 37 இந்திய கப்பல்கள்
March 3, 2026, 12:27 am
ஈரான் ஆதரவு பேச்சுகளை ‘கண்காணிக்க’ மாநில அரசுகளுக்கு இந்திய அரசு உத்தரவு
February 26, 2026, 4:34 pm
