செய்திகள் இந்தியா
ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவின் அனுமதி ஏன் தேவை? டிரம்புக்கு பயந்து மோடி ஆட்சி செய்வதைவிட ராஜினாமா செய்துவிடுங்கள்: அர்விந்த் கெஜ்ரிவால்
புதுடெல்லி:
ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்காவின் அனுமதி ஏன் தேவை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ரஷியாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதற்கு அனுமதியளிப்பதாக அமெரிக்கா கூறியதைக் குறிப்பிட்டு, "ரஷியாவிடம் எண்ணெய் வாங்க அனுமதியளிக்க அமெரிக்கா யார்? இந்தியாவுக்கு ஏன் அமெரிக்காவின் அனுமதி தேவை?
கடந்த சில மாதங்களாக, இந்திய நாட்டினர் பெரும் வேதனையுடன் இருந்து வருகின்றனர். அடுத்தடுத்து டிரம்ப் முன் நீங்கள் தலை வணங்குகிறீர்கள்.
அவருக்கு முன்னால் பேசுவதற்குகூட உங்களுக்கு தைரியம் இல்லை. டிரம்ப் முன்னால் நீங்கள் தலைவணங்க வேண்டியதன் நிர்ப்பந்தம் என்ன?
ஆயிரமாயிரம் ஆண்டுகள் பழைமையான நாடு இந்தியா. 1.4 பில்லியன் மக்களைக் கொண்ட நாடு இந்தியா. அடுத்தடுத்த துணிச்சலும் வீரமும் மிக்க வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது.
இதற்கு முன்பு இந்தியா எந்த நாட்டின் முன்பாகவும் தலை வணங்கியதே இல்லை. இந்திய வரலாற்றில் ஒருபோதும் இவ்வளவு பலவீனமான தலைமை இருந்ததில்லை.
டிரம்ப் ஏதேனும் நிர்ப்பந்தம் செய்கிறார் என்றால், இந்தியர்களின் நலனுக்காக தயவுசெய்து பதவியை ராஜிநாமா செய்து விடுங்கள்.
ஆனால், இந்தியாவை இப்படி தலைவணங்க விட வேண்டாம். நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த வேதனையில் உள்ளனர்" என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கூறியுள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
