செய்திகள் இந்தியா
எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு பிறகு ஈரான் உச்சத் தலைவர் கமேனி மறைவுக்கு இந்தியா இரங்கல்
புது டெல்லி:
ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லாஹ் அலி கமேனியின் மறைவுக்கு ஒரு வாரம் கடந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனத்திற்கு பிறகு இந்தியா இன்று (மார்ச் 5) இரங்கல் தெரிவித்தது.
இந்திய அரசின் சார்பாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஈரான் தூதரகத்தில் உள்ள இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
இது குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, ஈரான் இஸ்லாமியக் குடியரசின் தூதரகத்துக்குச் சென்று, உச்ச தலைவர் அயத்துல்லா சையத் அலி கமேனியின் மறைவுக்கு, மக்கள், இந்திய அரசின் சார்பாக இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்ட புகைப்படத்தில், இந்தியாவுக்கான ஈரானிய தூதர் முஹம்மது ஃபதாலியுடன் வெளியுறவுச் செயலாளர் உரையாடும் படங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தச் சந்திப்பின்போது ஈரான் தூதரிடம் இந்தியாவின் இரங்கல் செய்தியையும் மிஸ்ரி தெரிவித்தார்
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது நடத்தப்பட்ட அமெரிக்க - இஸ்ரேலிய ராணுவத் தாக்குதலில், கமெனியும் அவரது ஐந்து குடும்ப உறுப்பினர்கள், அவரது பேத்தி உட்பட, அவரது உயர்மட்ட ஆலோசகர்களும் இஸ்ரேல், அமெரிக்கப் படைகளால் படுகொலை கொல்லப்பட்டனர்.
இந்தியா சார்பாக கமேனியின் படுகொலைக்கு இரங்கல் செய்தி அல்லது தாக்குதல்களைக் கண்டிக்கும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
கமேனியின் கொலை குறித்து மத்திய அரசு மவுனம் காத்ததற்காக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்த நிலையில், மிஸ்ரி இன்று ஈரானிய தூதரகத்துக்குச் சென்று இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்டது முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும், இன்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் பேசினார் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல் ஈரானைத் தாக்குவதற்கு இரு நாள் முன்பு இஸ்ரேல் நாட்டிற்கு இந்தியப் பிரதமர் மோடி சென்று அந்த நாட்டு பிரதமர் நெத்தன் யாஹுவின் விருந்தில் கலந்து கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடியைப் போல் சிறந்த நண்பர் தமக்குக் கிடைத்தது பெரும் பாக்கியம் என்று நெத்தன் யாஹு செய்தியாளர்களிடம் கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
இந்தோனேசியாவில் மோடிக்கு உற்சாக வரவேற்பு
July 4, 2026, 5:32 pm
மும்பையில் கனமழை: சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
June 29, 2026, 5:59 pm
