நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் தேர்தல்: காய்ச்சல் உள்ளவர்கள் வாக்களிக்க சிறப்பு கூடாரங்கள் அமைப்பு

சரவாக்:

சரவாக் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிப்பதற்கு என சிறப்பு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்களிக்க வரும் வாக்காளர்களின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்படும் என்றும், மாறுபட்ட வெப்பநிலை பதிவாகும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் சுகாதாரப் பணியாளர்களின் மேற்பார்வையில் தனியாக வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்காணிப்பில் உள்ளவர்களும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களும் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் முன் அனுமதி பெற்று வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதற்கிடையே, சரவாக் முழுவதும் 1,866 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 46,565 ஊழியர்கள் வாக்குப்பதிவு உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

காலை 7.30 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மொத்தம் 1,213,769 வாக்காளர்கள் தங்களது வாக்குகளைச் செலுத்த உள்ளனர்.

அனைத்து வாக்காளர்களும் வாக்குப்பதிவு மையத்துக்கு வரும்போது முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் உடல் வெப்பத்தை பரிசோதித்துக் கொள்வது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது கட்டாயம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset