நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மருத்துவமனையில் நஜீப் 1 எம்டிபி வழக்கு விசாரணை செப்டம்பர் 17க்கு ஒத்திவைப்பு

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜீப் துன் ரசாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் 1 எம்டிபி வழக்கு விசாரணை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

முழங்கால் சிகிச்சைக்காக அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சிகிச்சையினால் நஜீப்பிற்கு கூடுதலாக இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

அது நாளையுடன் முடிவடைகிறது. இதனால் அவர் விரைவில்  குணமடைவார் என்று கோலாலம்பூர் மருத்துவமனையின் மூத்த எலும்பியல் ஆலோசகர் டாக்டர் சித்தி ஹவ்வா தாஹிர் கூறினார்.

நஜீப்  மூச்சுத்திணறலால் அவதிப்படுகிறார் என்றும், அவருக்கு வழங்கப்படும் மருந்துகள் மிகவும் அதிக வீர்யமுள்ளவை.  

இதனால், இந்த வாரம் நஜீப் விசாரணைக்கு வர இயலவில்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset