நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமூகத்தின் ஆற்றலை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது: டத்தோஸ்ரீ தனேந்திரன் 

பினாங்கு:

நாட்டில் உள்ள இந்திய சமுதாயம் ஆற்றல்  உள்ள சமூகமாக உள்ளது. அவர்களை யாரும் குறைத்து மதிப்பிடக் கூடாது.

மலேசிய மக்கள் சக்தி கட்சி தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் இதனை கூறினார்.

இருந்தபோதும் இந்த நாட்டில இந்திய இளைஞர்கள் எதிர்காலத்தில் மேலும் சிறப்புடையவர்களாக உருவாக்க அரசாங்கம் அவர்களின் தேவைகளை அறிந்து உதவிட வேண்டும்.

தங்களின் கல்வியை நிறைவு செய்யும்போது அவர்களுக்கு அரசு துறைகளிலும் அதிகமான வாய்ப்புகள், வர்த்தகத் துறையில் ஈடுபட வழிகாட்டுதல்களை உருவாக்க அரசாங்கம் தொடர்ந்து வாய்ப்பளிக்க வேண்டும்.

இந்திய இளைஞர்கள் மத்தியில் திறமையானவர்கள் அதிகமானோர் உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு  வாய்ப்பு வழங்குவதின் வழி நாட்டின் மேம்பாட்டிற்கு அவர்களின் பங்களிப்பு பெரும் உதவியாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.

டத்தோஸ்ரீ ஆர்.எஸ். தனேந்திரன் பினாங்கு மாநாட்டை தொடக்கி வைத்து ஆற்றிய உரையில் இவ்வாறு  குறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில்  கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தொடர்ந்து சுறுசுறுப்பாகவும், கட்சிக்கு எப்போதும் விசுவாசமாகவும் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  

தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள், நாட்டின் நிலை குறித்து விழிப்புடன் இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இதனால் ஒவ்வொரு உறுப்பினரும் மக்களின் நலன்களுக்காக போராடுவதில் மிகவும் பயனுள்ள பங்கை வகிக்க முடியும்.  

மேலும், கட்சி உறுப்பினர்களிடையே ஒற்றுமையும் ஒத்துழைப்புமே கட்சியின் எதிர்கால வெற்றிக்கு முக்கியமாகும் என்றும் அவர் நினைவூட்டினார்.

இம் மாநாட்டில் டாக்டர் ஏ.வி. பிரசாத் தலைமையிலான பத்து கவான், நிபோங் திபால்  மக்கள் சக்தி  கிளைகளில் உறுப்பினர்கள் பட்டியல்  கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset