நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பகாங் சுல்தான் பிறந்தநாளை முன்னிட்டு துணையமைச்சர் டத்தோ ரமணன் டத்தோஶ்ரீ விருது பெற்றார்

பெக்கான்:

பகாங் சுல்தான் பிறந்தநாளை முன்னிட்டு துணையமைச்சர் டத்தோ ரமணன் டத்தோஶ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

பகாங் சுல்தான் அல் சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுதீனின் பில்லா ஷாவின் 65ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டது.

இதில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணனுக்கு டத்தோஶ்ரீ விருது வழங்கப்பட்டது.

எஸ்எஸ்ஏபி எனப்படும் ஸ்ரீ சுல்தான் அஹமத் ஷா பகாங் எனும் உயரிய டத்தோஶ்ரீ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் டத்தோஶ்ரீ விருதுப் பெற்ற அவருக்கு வாழ்த்துகள் குவித்து வருகிறது.

தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துணையமைச்சராக பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் பல திட்டங்களை டத்தோஶ்ரீ  ரமணன் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக குறு, சிறு, நடுத்தர வணிகர்களின் மேம்பாட்டில் அவர் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

அவரின் இப்பணி தொடர வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset