நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

என் அப்பாவுக்கு சொந்தமான நிலத்தில் அத்துமீறிய தரப்பினர் மீது  போலிசார் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்: அய்மான் கோரிக்கை

கோம்பாக்:

என் அப்பாவுக்கு சொந்தமான நிலத்தில் அத்துமீறிய தரப்பினர் மீது போலிசார் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நோர் அய்மான் ஷாக்குவான் இதனை கூறினார்.

கோம்பாக் மாவட்டத்திற்கு உட்பட்ட கம்போங் சுங்கை பூசுவின் என் அப்பா டத்தோ நோர் ஹஸ்னாலுக்கு சொந்தமாக 6 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் நிலத்தில் அத்துமீறி மணலை எடுத்துக் கொண்டிருக்கின்றனர். அதே வேளையில் இங்கு பல குளங்களும் வெட்டப்பட்டுள்ளது.

எங்களில் நிலத்தில் போடப்பட்ட வேலியையும் பிடுங்கி எறிந்து அவர்கள் இந்நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கேள்வி கேட்டால் குண்டர் கும்பலை வைத்து மிரட்டுகின்றனர்.

இதன் அடிப்படையில் தான் இந்த விவகாரம் குறித்து போலிசில் புகார் செய்துள்ளோம்.

இப் புகாருக்கு போலிஸ் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset